Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி போட்ட மாஸ்டர்பிளான்.. மற்ற அணிகளை அடிச்சு தூக்கி ஓவர்டேக் செய்த சிஎஸ்கே.. வெளியான ரகசியம்!

துபாய் : 2020 ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. அனைத்து அணிகளும் அந்த நாட்டுக்கு சென்று உள்ளன.

Recommended Video

IPL 2020: Dhoni அடித்த Sixer! Whistle போட்ட Raina! | OneIndia Tamil

மற்ற அணிகள் அனைத்தும் எப்போது பயிற்சி செய்யத் துவங்கலாம் என குவாரன்டைனில் இருந்து கொண்டு திட்டமிட்டு வருகின்றன.

சில அணிகளுக்கு மேலும் ஒரு வாரம் குவாரன்டைனில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதால் விரக்தியில் உள்ளன.

சிஎஸ்கே நிம்மதி

சிஎஸ்கே நிம்மதி

ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டுமே இந்த விஷயத்தில் நிம்மதியாக உள்ளது. அதற்கு காரணம் கேப்டன் தோனி தான். துபாய் செல்லும் முன்பே சிஎஸ்கே அணி பயிற்சியும் செய்து, பாதுகாப்பு வளையத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டு விட்டது.

2020 ஐபிஎல் தொடர்

2020 ஐபிஎல் தொடர்

2020 ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருந்திருந்தால் கடந்த மார்ச் மாத இறுதியில் துவங்கி இருக்கும். ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் லாக்டவுன், விமான சேவை முடக்கம் போன்ற காரணங்களால் ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டது.

எப்போது ஐபிஎல்?

எப்போது ஐபிஎல்?

2020 டி20 உலகக்கோப்பை தொடர் தள்ளி வைக்கப்பட்டதால் அந்த தொடர் நடக்க இருந்த அக்டோபர் மாதம் எந்த பெரிய கிரிக்கெட் தொடரும் நடைபெறாது. அதே காலகட்டத்தில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ முடிவு செய்தது.

சிக்கல்

சிக்கல்

செப்டம்பர் 18 முதல் நவம்பர் 10 வரை 2020 ஐபிஎல் தொடரை நடத்த உள்ளது பிசிசிஐ. இதில் பெரிய சிக்கலாக இருப்பது இந்திய வீரர்களின் பயிற்சி தான். கடந்த ஐந்து மாதமாக எந்த கிரிக்கெட் தொடரிலும் ஆடாமல் இந்திய வீரர்கள் வீட்டிலேயே முடங்கி இருந்தனர்.

மூன்று வாரங்கள் மட்டுமே

மூன்று வாரங்கள் மட்டுமே

இந்த நிலையில், அவர்களுக்கு குறைந்தது ஒரு மாத காலமாவது கிரிக்கெட் பயிற்சி அளிக்க வேண்டும். ஆனால், தற்போது அதற்கான நேரம் இல்லை. அதிகபட்சமே மூன்று வாரங்கள் மட்டுமே ஐபிஎல் அணிகள் பயிற்சி முகாம்களை நடத்த உள்ளன.

தோனி திட்டம்

தோனி திட்டம்

இதில் சிஎஸ்கே அணி மட்டும் விதிவிலக்கு. தோனி, ரெய்னா, அம்பதி ராயுடு, தீபக் சாஹர் என பல சிஎஸ்கே அணி வீரர்கள் 7 - 8 மாதமாக கிரிக்கெட் போட்டிகளில் ஆடவில்லை. அதனால், கேப்டன் தோனி ஒரு திட்டம் தீட்டினார்.

பயிற்சி முகாம்

பயிற்சி முகாம்

துபாய் கிளம்பும் முன் சென்னையிலேயே ஆறு நாள் பயிற்சி முகாம் நடத்த வேண்டும் என்றும், மேலும், சென்னையிலேயே பாதுகாப்பு வளையத்திற்குள் இருப்பதன் மூலம் துபாயில் எப்படி சூழ்நிலைகள் இருக்கும் என்பதை சிஎஸ்கே வீரர்கள் தெரிந்து கொள்ள முடியும் என்றும் கூறி உள்ளார் தோனி. இந்த தகவலை சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி உள்ளார்.

துபாய் சென்ற சிஎஸ்கே

துபாய் சென்ற சிஎஸ்கே

தோனியின் யோசனையை ஏற்று சிஎஸ்கே அணி நிர்வாகம் சென்னையில் ஆகஸ்ட் 15 முதல் 20 வரை ஆறு நாள் பயிற்சி முகாம் நடத்தியது. அதன் பின்னரே சிஎஸ்கே அணி துபாய் கிளம்பிச் சென்றது. துபாயில் ஏழு நாள் குவாரன்டைனில் உள்ளது சிஎஸ்கே. அதன் பின் மூன்று வாரம் வீரர்கள் பயிற்சி செய்ய உள்ளனர்.

கூடுதல் பயிற்சி

கூடுதல் பயிற்சி

மற்ற அணிகளை விட கூடுதல் பயிற்சி பெறப் போவது சிஎஸ்கே மட்டுமே. மேலும், மும்பை, கொல்கத்தா ஆகிய இரு அணிகளும் அபுதாபியில் தங்கி இருப்பதால் அங்கே உள்ள குவாரன்டைன் விதிப்படி 14 நாட்கள் ஹோட்டல் அறையிலேயே தங்கி இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

முதல் போட்டி

முதல் போட்டி

தோனியின் சென்னை பயிற்சி முகாம் திட்டத்தால் சிஎஸ்கே அணி மற்ற அணிகளை முந்தி உள்ளது. செப்டம்பர் 18 அன்று நடக்க உள்ள முதல் போட்டியில் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐபிஎல் போட்டி அட்டவணை இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, August 28, 2020, 17:55 [IST]
Other articles published on Aug 28, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+