Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

12 சீசன்களில் இப்படி செய்ததே இல்லை.. தோனியா இப்படி? படுமோசமான ரெக்கார்டு!

அபுதாபி : 2020 ஐபிஎல் தொடர் துவங்கும் முன் தோனி மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால், இந்த சீசனின் முடிவில் தோனி செயல்பாடு பெரும் ஏமாற்றம் அளித்துள்ளது.

இந்த சீசனில் தோனி ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. மேலும், மிகக் குறைந்த ஸ்கோரையே அடித்துள்ளார் தோனி.

தோனி ஓய்வு

தோனி ஓய்வு

தோனி சர்வதேச அரங்கில் கடைசியாக 2019 உலகக்கோப்பை தொடரின் அரை இறுதிப் போட்டியில் ஆடி இருந்தார். அதன் பின் எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், 2020 ஐபிஎல் தொடருக்கு முன் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

சுமாரான ஆட்டம்

சுமாரான ஆட்டம்

ஓய்வை அறிவித்த நிலையில் தோனி 2020 ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் ரன் குவிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அது நடக்கவில்லை. தோனி சுமாராகவே ஆடி வந்தார். அவரால் முன்பு போல நினைத்த படி அடித்து ஆடி ரன் சேர்க்க முடியவில்லை.

அரைசதம் அடிக்காத சீசன்

அரைசதம் அடிக்காத சீசன்

இதற்குமுன் தோனி பங்கேற்ற 12 ஐபிஎல் சீசன்களில் அரைசதம் அடித்துள்ளார். ஆனால், 2020 சீசனில் தான் முதன்முறையாக ஒரு அரைசதம் கூட அடிக்காமல் இருந்துள்ளார். பேட்டிங்கை பொறுத்தவரை இது தான் அவரது மோசமான சீசன்.

ஸ்கோர் இதுதான்

ஸ்கோர் இதுதான்

12 இன்னிங்க்ஸ்களில் தோனி 199 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். அவரது சராசரி 28.42. இந்த சீசனில் அவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் 47 ரன் தான். ஒரு சில போட்டிகளில் அவர் ரன் குவித்தாலும் கூட நிதானமாக ஆடியதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த சீசனில் ஆடுவார்

அடுத்த சீசனில் ஆடுவார்

தோனி இந்த சீசனில் ஏமாற்றம் அளித்தாலும், அடுத்த சீசனில் அவர் பங்கேற்பார் என உறுதியாக கூறி உள்ளார். சிஎஸ்கே அணி நிர்வாகமும் தோனி தான் அடுத்த சீசனிலும் கேப்டன் என உறுதியாக கூறி உள்ளது. அடுத்த ஆண்டுக்குள் தோனி தன் அதிரடி ஆட்டத்தை மீட்டு விடுவாரா?

Story first published: Sunday, November 1, 2020, 23:22 [IST]
Other articles published on Nov 1, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+