For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மறுபடியும் சீன கம்பெனியா? வெளியான ஐபிஎல் ரகசியம்.. விளாசித் தள்ளும் ரசிகர்கள்!

மும்பை : 2020 ஐபிஎல் தொடரில் சீன நிறுவனம் டைட்டில் ஸ்பான்சராக இருக்கக் கூடாது என எழுந்த விமர்சனத்தை அடுத்து சீன மொபைல் நிறுவனமான விவோ விலகியது.

Recommended Video

IPL 2020: Dream11 bags title sponsorship | OneIndia Tamil

அடுத்து புதிய டைட்டில் ஸ்பான்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளது ட்ரீம் 11 எனும் விளையாட்டு சார்ந்த ஆன்லைன் பந்தய நிறுவனம்.

இந்த நிறுவனதில் சீன முதலீடு இருக்கும் தகவல் காட்டுத்தீயாக பரவி வருவதால் ஐபிஎல் மீண்டும் விமர்சனத்தை சந்தித்துள்ளது.

ஐபிஎல்

ஐபிஎல்

2020 ஐபிஎல் தொடர் மார்ச் முதல் மே வரை நடந்து இருந்தால் இத்தனை சிக்கல்கள் ஏற்பட்டு இருக்காது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டது. மீண்டும் செப்டம்பர் 19 முதல் ஐபிஎல் தொடர் துவங்க உள்ளது.

சீனாவுக்கு எதிரான மனநிலை

சீனாவுக்கு எதிரான மனநிலை

கடந்த மாதம் இந்தியா - சீனா இடையே எல்லை பிரச்சனை வந்ததை அடுத்து இந்தியாவில் சீன நிறுவனங்களுக்கு எதிரான மனநிலை நிலவி வருகிறது. ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சராக இருக்கும் சீன மொபைல் நிறுவனமான விவோவுடன் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன.

புதிய ஒப்பந்தம்

புதிய ஒப்பந்தம்

இந்த நிலையில், விவோ தானாகவே விலகிக் கொண்டது. அடுத்து பிசிசிஐ ட்ரீம் 11 உடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. விவோ ஆண்டுக்கு 440 கோடி கொடுத்த நிலையில், ட்ரீம் 11 அதில் பாதி அளவாக 222 கோடி மட்டுமே கொடுத்து ஒப்பந்தத்தை கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது.

சீன முதலீடு

சீன முதலீடு

ஒருவழியாக ஐபிஎல் தொடர் சீன விளம்பர சிக்கலில் இருந்து வெளி வந்துவிட்டதாக கருதிய நிலையில், ரசிகர்கள் பலர் ட்ரீம் 11இல் சீன முதலீடு இருப்பதை சுட்டிக் காட்டி உள்ளனர். ட்ரீம் 11 சீன நிறுவனமா? என்றால் இல்லை, அது இந்திய நிறுவனம் தான்.

2012இல் துவக்கம்

2012இல் துவக்கம்

ட்ரீம் 11 எனும் ஆன்லைன் பந்தயம் கட்டும் அந்த நிறுவனத்தை 2012இல் ஹர்ஷ் ஜெயின் மற்றும் பவித் செத் துவக்கினர். ஃபேன்டசி ஸ்போர்ட்ஸ் நிறுவனங்களில் அந்த நிறுவனம் முதன்மையாக விளங்கி வருகிறது. அந்த நிறுவனத்தில் பல பெரிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

டென்சென்ட் முதலீடு

டென்சென்ட் முதலீடு

அதில் ஒரு நிறுவனம் தான் டென்சென்ட் எனும் சீன நிறுவனம் 10 சதவிகித பங்குகளை வாங்கி முதலீடு செய்துள்ளது. உலகின் பெரிய வீடியோ கேமிங் கம்பெனி தான் இந்த டென்சென்ட். சமீப காலங்களில் பப்ஜி உள்ளிட்ட விளையாட்டுக்களை அந்த நிறுவனம் வாங்கி உள்ளது.

சூதாட்டமா?

சூதாட்டமா?

முந்தைய காலங்களில் ட்ரீம் 11 நேரலையில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகள் சார்ந்த பந்தயங்களை நடத்தி வந்ததால் அது சூதாட்டம் என்றும் அதை தடை செய்ய வேண்டும் என்றும் வழக்குகள் நடந்துள்ளன. எனினும், அதில் ட்ரீம் 11 வெற்றி பெற்றது.

விளம்பர தூதர் தோனி

விளம்பர தூதர் தோனி

ட்ரீம் 11 நிறுவனத்தின் முக்கிய விளம்பர தூதர் தோனி என்பது குறிப்பிடத்தக்கது. 2019 உலகக்கோப்பை தொடரின் ஸ்பான்சராக இருந்த அந்த நிறுவனம் அப்போது பல்வேறு அணிகளை சேர்ந்த ஒன்பது கிரிக்கெட் வீரர்களுடன் விளம்பர ஒப்பந்தம் செய்து பரபரப்பை கிளப்பியது.

ட்ரீம் 11 விளம்பர ஒப்பந்தம்

ட்ரீம் 11 விளம்பர ஒப்பந்தம்

ஐபிஎல் உடன் கடந்த ஆண்டே விளம்பர ஒப்பந்தம் செய்துள்ள ட்ரீம் 11, 2020 ஐபிஎல்-இல் டைட்டில் ஸ்பான்சராகவே மாறி உள்ளது. இந்த நிறுவனத்தின் சீன தொடர்பை சுட்டிக் காட்டும் ரசிகர்கள் பிசிசிஐ மீது விமர்சனம் வைத்து வருகின்றனர்.

மீண்டும் சீனாவா?

மீண்டும் சீனாவா?

விவோ எனும் சீன நிறுவனத்தின் ஒப்பந்தத்தை விட்டு விலகி, மீண்டும் சீன முதலீடு உள்ள ட்ரீம் 11 உடன் ஏன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்? என கேள்வி எழுப்பி உள்ளனர். விவோ உடனே ஒப்பந்தத்தை தொடர்ந்து இருக்கலாமே என கூறி வருகின்றனர்.

Story first published: Wednesday, August 19, 2020, 11:39 [IST]
Other articles published on Aug 19, 2020
English summary
IPL 2020 : Dream 11 and its chinese connection makes IPL still under scrutiny for its Chinese sponsorships, after VIVO exit.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+