Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரை ரன் அவுட் செய்யணும்.. அதுவும் நோ பால்ல.. பழி தீர்க்க துடித்த ஏபிடி.. பரபர சம்பவம்!

அபுதாபி : ஹைதராபாத் - பெங்களூர் அணிகள் மோதிய பரபரப்பான எலிமினேட்டர் போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ஒரு கட்டத்தில் டேவிட் வார்னரை ரன் அவுட் செய்யுங்கள் என பெங்களூர் அணியின் விக்கெட் கீப்பர் ஏபி டிவில்லியர்ஸ் கத்தினார்.

இதனால் போட்டியில் பரபரப்பு எழுந்தது, இதில் ஒரு சுவாரசியமான பழி தீர்க்கும் படலமும் அடங்கி உள்ளது.

எலிமினேட்டர் போட்டி

எலிமினேட்டர் போட்டி

எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பெங்களூர் அணியின் பேட்டிங் மோசமாக அமைந்தது. முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 131 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஃப்ரீ-ஹிட்

ஃப்ரீ-ஹிட்

பெங்களூர் அணி பேட்டிங் ஆடிய போது ஏபி டிவில்லியர்ஸ் களத்தில் இருந்தார். அப்போது 10வது ஓவரில் வீசினார் ஷாபாஸ் நதீம். அந்த ஓவரின் 4வது பந்தை அவர் நோ பாலாக வீசினார். நோ பால் வீசப்பட்டதால், ஃப்ரீ-ஹிட் கொடுக்கப்பட்டது.

ரன் அவுட்

ரன் அவுட்

ஃப்ரீ-ஹிட் பந்தை மொயீன் அலி எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் அதுதான் அவர் எதிர்கொண்ட முதல் பந்து. அந்த பந்தை கவர் திசையில் அடித்து ஒரு ரன் ஓட முயற்சி செய்தார். அப்போது நேரடியாக ஸ்டம்ப்பில் அடித்து ரன் அவுட் செய்தார் ரஷித் கான்.

அரிதான சம்பவம்

அரிதான சம்பவம்

ஃப்ரீ-ஹிட் என்பதே ஒரு பேட்ஸ்மேன் கேட்ச், எல்பிடபுள்யூ அல்லது பவுல்டு அவுட் ஆனாலும் அவுட் இல்லை என்பது தான். அந்த பந்தில் ரன் அவுட் மட்டுமே அவுட் ஆகக் கூடிய ஒரே வழி. அதில் ரன் அவுட் ஆவது கிரிக்கெட்டில் அரிதான சம்பவம்.

பழி வாங்கும் முயற்சி

பழி வாங்கும் முயற்சி

இந்த நிலையில் மொயீன் அலி விக்கெட்டை கண்ட ஏபி டிவில்லியர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னருக்கும் அதே போல ஷாக் கொடுக்க முயற்சி செய்தார். மொயீன் அலி ரன் அவுட்டுக்கு பழி தீர்க்கவே ஏபி டிவில்லியர்ஸ் துடித்தார். எனினும், டேவிட் வார்னர் அப்போது அவுட் ஆகவில்லை.

Story first published: Saturday, November 7, 2020, 12:59 [IST]
Other articles published on Nov 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+