Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யப்பா சாமி முடியலை.. ஆர்சிபியை பங்கம் செய்த சிஎஸ்கே.. விழுந்து விழுந்து சிரிக்கும் ரசிகர்கள்!

அபுதாபி : 2020 ஐபிஎல் தொடரில் இருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி எலிமினேட்டர் போட்டியுடன் வெளியேறியது.

இந்த நிலையில், சிஎஸ்கே அணியை ஆர்சிபி ரசிகர்கள் கிண்டல் செய்த வார்த்தைகளை வைத்து கிண்டல் செய்துள்ளது சிஎஸ்கே அணி.

அதிகாரப்பூர்வ ட்விட்டரில் பக்கத்திலேயே போட்டி ஐபிஎல் அணியை மோசமாக கிண்டல் செய்ததை கண்டு சிஎஸ்கே ரசிகர்கள் சிரித்து வருகின்றனர்.

சிஎஸ்கே அணி தோல்வி

சிஎஸ்கே அணி தோல்வி

2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி லீக் சுற்றில் துவக்கத்தில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தது. அந்த அணி பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பையும் இழந்தது. கடைசி சில போட்டிகளில் சிஎஸ்கே அணி தொடர்ந்து வெற்றி பெற்று ஆறுதல் அளித்தாலும் தோல்விகளால் அந்த அணி துவண்டு போயுள்ளது.

பெங்களூர் வெற்றி

பெங்களூர் வெற்றி

அதே சமயம் கடந்த சீசன்களில் பெங்களூர் அணி மோசமான நிலையில் இருந்தது. ஆனால், இந்த சீசனில் துவக்கத்தில் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் மாறி, மாறி இடம் பிடித்து அசத்தியது. சிஎஸ்கே அணியுடனான முதல் லீக் போட்டியில் பெங்களூர் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

புடி புடி கிண்டல்

புடி புடி கிண்டல்

கடந்த சீசன்களில் சிஎஸ்கே ரசிகர்கள் பெங்களூர் அணியை மோசமாக கிண்டல் செய்து இருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த சீசனில் சில பெங்களூர் அணி ரசிகைகள் பாட்டுப் பாடி சிஎஸ்கே அணியை கலாய்த்து இருந்தனர். அதில் "சிஎஸ்கே புடி புடி" என்ற வாசகம் பிரபலம் ஆனது.

கடுப்பான சிஎஸ்கே

கடுப்பான சிஎஸ்கே

சிஎஸ்கே புடி புடி என்றால் கன்னடத்தில் சிஎஸ்கே அணியை தூள், தூளாக நொறுக்கி விட்டோம் என்பது அர்த்தம். இதை அறிந்து சிஎஸ்கே ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்தனர். நமக்கு ஒரு சந்தர்ப்பம் வராதா என காத்திருந்தனர்.

திருப்பி அடித்தது

திருப்பி அடித்தது

அந்த சந்தர்ப்பம் லீக் சுற்றின் இரண்டாவது சந்திப்பில் பெங்களூர் அணியை வீழ்த்திய போது கிடைத்தது. அந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. அந்தப் போட்டியின் முடிவில் சிஎஸ்கே ரசிகர்கள் பெங்களூர் அணியை கலாய்த்தனர்.

பெங்களூர் வெளியேற்றம்

பெங்களூர் வெளியேற்றம்

அடுத்ததாக பிளே-ஆஃப்சுற்றுக்கு தட்டுத் தடுமாறி முன்னேறிய பெங்களூர் அணி அதில் எலிமினேட்டர் போட்டியில் ஹைதராபாத் அணியிடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்தே வெளியேறியது. இந்த நேரத்தில் அந்த அணியை மோசமாக கிண்டல் செய்துள்ளது சிஎஸ்கே அணி.

சிஎஸ்கே கிண்டல்

சிஎஸ்கே கிண்டல்

சிஎஸ்கே அணி தன் ட்விட்டர் பக்கத்தில், ருதுராஜ் கெயிக்வாட் கேட்ச் பயிற்சி செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு, "புடி, புடி" என பதிவிட்டுள்ளது. சாதாரணமாக பார்த்தால் இது "கேட்ச் புடி" என்பது போலத் தான் இருக்கும். ஆனால், சிந்தித்தால் இது பெங்களூர் ரசிகைகள் சொன்ன அதே புடி புடி தான்.

Story first published: Saturday, November 7, 2020, 18:23 [IST]
Other articles published on Nov 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+