Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் கப் இவருக்குத்தான்.. ரோஹித், தோனிக்கு நடந்த அதே சம்பவம்.. வியந்து போன ரசிகர்கள்!!

அபுதாபி : 2020 ஐபிஎல் தொடரில் கோப்பை வெல்லப் போகும் கேப்டன் இவர்தான் என டேவிட் வார்னரை மீண்டும் கை காட்டுகிறார்கள் ரசிகர்கள்.

முன்னதாக ரோஹித் சர்மா, தோனி செய்த அதே சாதனையை இந்த சீசனில் டேவிட் வார்னர் செய்துள்ளார்.

ரோஹித் சர்மா, தோனி அப்போது ஐபிஎல் கோப்பை வென்றதை அடுத்து அதே போல, டேவிட் வார்னர் இந்த முறை ஐபிஎல் கோப்பை வெல்வார் என கூறுகிறார்கள் ரசிகர்கள்.

டாஸ் வெற்றி

டாஸ் வெற்றி

2020 ஐபிஎல் தொடர் பிளே-ஆஃப் சுற்றுக்கு வந்துள்ளது. லீக் சுற்றில் முதல் நான்கு இடம் பிடித்த அணிகள் பிளே-ஆஃப் சுற்றில் மோதி வருகின்றன. இதில் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

நாக் அவுட்

நாக் அவுட்

இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தால் தொடரை விட்டே விலக வேண்டிய நிலை ஏற்படும். இந்த முக்கியமான நாக் அவுட் போட்டியில் ஹைதரபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்றார். முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இது அந்த அணிக்கு சாதகமாக அமைந்தது.

சாதனை

சாதனை

இது வார்னர் இந்த சீசனில் வெல்லும் 11வது டாஸ் ஆகும். இது ஐபிஎல் தொடரில் அரிய சாதனை. இதற்கு முன் இரண்டு ஐபிஎல் அணி கேப்டன்கள் இதே சாதனையை செய்துள்ளனர். அந்த இரண்டு சீசன்களிலும் அவர்கள் தான் கோப்பை வென்றனர்.

ரோஹித் வெற்றி

ரோஹித் வெற்றி

2017 ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா 11 முறை டாஸ் வென்றார். அந்த தொடரில் அவர் கேப்டனாக செயல்படும் மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் போட்டி வரை முன்னேறி, புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை இறுதிப் போட்டியில் வீழ்த்தி கோப்பை வென்றது.

தோனி

தோனி

அதே போல, 2018 ஐபிஎல் தொடரில் தடைக்கு பின் மீண்டும் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி 11 முறை டாஸ் வென்றார். அந்த சீசனின் இறுதியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி சென்னை அணி கோப்பை வென்றது.

வார்னருக்கு வாய்ப்பு

வார்னருக்கு வாய்ப்பு

அதே போல, இந்த சீசனில் டேவிட் வார்னர் 11 முறை டாஸ் வென்றுள்ளார். அவர் எப்படியும் இந்த சீசனில் ஐபிஎல் கோப்பை வென்று கொடுப்பார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஹைதராபாத் கோப்பை வெல்லும் என கூறப்படுவது முதல் முறையல்ல.

வைரல் பதிவு

வைரல் பதிவு

முன்னதாக ஒரு ரசிகர் ஐபிஎல் துவங்க இரு மாதங்களுக்கு முன்பே ஐபிஎல் தொடரில் என்ன நடக்கும் என நடந்ததை முன் கூட்டியே கூறி இருக்கும் ஒரு பதிவு வைரல் ஆனது. அதில் ஹைதராபாத் அணி தான் கோப்பை வெல்லும் என அவரும் கணித்துள்ளார்.

Story first published: Friday, November 6, 2020, 22:40 [IST]
Other articles published on Nov 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+