Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வேற டீமா இருந்தா வீட்டுக்கு அனுப்பி இருப்பாங்க.. கோலியை உடனே தூக்குங்க.. அதிர வைத்த முன்னாள் வீரர்

அபுதாபி : 2020 ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃப் வரை முன்னேறியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.

கடந்த மூன்று சீசன்களில் அந்த அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. இந்த நிலையில், இந்த சீசனில் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய அந்த அணி எலிமினேட்டர் போட்டியில் தோல்வி அடைந்தது.

இந்த தோல்வியால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இந்த சீசன் ஐபிஎல் தொடரை விட்டு விலகியது பெங்களூர் அணி.

கம்பீர் விமர்சனம்

கம்பீர் விமர்சனம்

முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், எட்டு ஆண்டுகள் பெங்களூர் அணியின் கேப்டனாக இருந்து அவரால் கோப்பை வென்று தர முடியவில்லை என்றால் அவரை கேப்டன் பதவியை விட்டே நீக்க வேண்டும் என அதிரடியாக கூறி உள்ளார்.

பெங்களூர் அணி நிலை

பெங்களூர் அணி நிலை

பெங்களூர் அணி சிறந்த வீரர்களைக் கொண்ட அணியாக இருந்தும் இதுவரை ஐபிஎல் கோப்பை வெல்லவில்லை. தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தது அந்த அணி. விராட் கோலி கடந்த 8 ஆண்டுகளாக கேப்டனாக இருந்தும் அந்த அணியால் சிறப்பாக செயல்பட முடியவில்லை.

பிளே-ஆஃப் கூட செல்லவில்லை

பிளே-ஆஃப் கூட செல்லவில்லை

2017ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை அந்த அணியால் பிளே-ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேற முடியவில்லை. மோசமான செயல்பாடுகளால் அந்த அணி கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் 2020 ஐபிஎல் தொடரின் துவக்கத்தில் வெற்றிகளை குவித்தது.

நான்கு தோல்விகள்

நான்கு தோல்விகள்

ஆனால், லீக் சுற்றின் கடைசி நான்கு போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்தது. அப்படி இருந்தும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நெட் ரன் ரேட் குறைவாக இருந்ததால் நூலிழையில் பெங்களூர் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

எலிமினேட்டர் தோல்வி

எலிமினேட்டர் தோல்வி

பிளே-ஆஃப் சுற்றில் எலிமினேட்டர் போட்டியில் பங்கேற்ற பெங்களூர் அணி ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது. அந்த அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது பெங்களூர். அத்துடன் 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகியது.

எட்டு ஆண்டுகள்

எட்டு ஆண்டுகள்

இந்த நிலையில் எட்டு ஆண்டுகள் கேப்டனாக இருந்தும் அணிக்கு ஒரு முறை கூட கோப்பை வென்று தராத விராட் கோலி தாமாகவே பொறுப்பை ஏற்றுக் கொண்டு கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என கூறினார் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர்.

கேப்டன் பதவி

கேப்டன் பதவி

வேறு அணிகளில் எட்டு ஆண்டுகளாக ஒரு வீரர் கோப்பை வெல்லாத நிலையில் அணியில் நீடிக்க முடியமா என அவர் கேள்வி எழுப்பி உள்ளார். அப்படி இருக்கும் போது கேப்டன் ஒருவர் எப்படி எட்டு ஆண்டுகள் கோப்பை வெல்லாமல் அணியில் இருக்க முடியும் எனவும், கோலி தாமாக முன்வந்து பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

பிளே-ஆஃப் போகக் கூட தகுதி இல்லை

பிளே-ஆஃப் போகக் கூட தகுதி இல்லை

மேலும், இந்த சீசனில் பெங்களூர் அணி நான்கு தோல்விகளுக்கு பின்னும் பிளே-ஆஃப் செல்லத் தகுதியான அணி என விராட் கோலி கூறி இருந்தார். அதை மறுத்துள்ள கம்பீர் பெங்களூர் அணி பிளே-ஆஃப் செல்லக் கூடத் தகுதி இல்லை. அவர்கள் ஆடியது மோசமாக இருந்ததாக கூறினார்.

Story first published: Saturday, November 7, 2020, 14:10 [IST]
Other articles published on Nov 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+