Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏபிடி மாதிரியெல்லாம் ஆட வராது.. இப்படி தான் ஆடுவேன்.. பரபர போட்டி.. நடுவே நின்று கெத்து காட்டிய கேன்

அபுதாபி : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேன் வில்லியம்சன் அபார ஆட்டம் ஆடினார்.

பெங்களூர் அணியில் ஏபி டிவில்லியர்ஸ் எப்படி அணியை கரை சேர்க்க போராடினாரோ, அதே போலவே வில்லியம்சனும் தன் அணியை வெற்றி பெற வைக்க போராடினார். ஆனால், படுநிதான ஆட்டம் ஆடி வெற்றி பெற வைத்தார்.

பெங்களூர் ஸ்கோர்

பெங்களூர் ஸ்கோர்

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது பெங்களூர் அணி. அந்த அணியில் ஆரோன் பின்ச், ஏபி டிவில்லியர்ஸ் மட்டுமே ஓரளவு ரன் குவித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் பெங்களுர் அணி 131 ரன்கள் மட்டுமே எடுத்தது.

கடினமான பிட்ச்

கடினமான பிட்ச்

போட்டி நடந்த அபுதாபி ஆடுகளம் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது. கோலி முதல் டிவில்லியர்ஸ் வரை முக்கிய பேட்ஸ்மேன்களே ரன் குவிக்க திணறினர். அதனால் தான், முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி குறைந்த ஸ்கோர் எடுத்தது.

ஏபி டிவில்லியர்ஸ் போராட்டம்

ஏபி டிவில்லியர்ஸ் போராட்டம்

அந்த மோசமான பிட்ச்சிலும் கூட ஏபி டிவில்லியர்ஸ் அதிரடி ஆட்டம் ஆடி இருந்தார். அவர் 43 பந்துகளில் 56 ரன்கள் குவித்து இருந்தார். அவர் கடைசி 2 ஓவர்களில் களத்தில் நின்று இருந்தால் இன்னும் கூட அதிரடியாக ரன் குவித்து இருப்பார்.

ஹைதராபாத் சேஸிங்

ஹைதராபாத் சேஸிங்

இந்த நிலையில், ஹைதராபாத் அணி 132 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சேஸிங் செய்தது. ,மோசமான பிட்ச் என்பதால் அந்த அணியும் தடுமாறியது. வார்னர் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்களும் சொற்ப ரன்களே எடுத்தனர்.

வில்லியம்சன் ஆட்டம்

வில்லியம்சன் ஆட்டம்

ஆனால், கேன் வில்லியம்சன் நங்கூரம் போட்டு நின்றார். மிக மிக நிதானமாக ஆடினார். ஒரு கட்டத்தில் அவர் ஸ்ட்ரைக் ரேட் 50-ஐ ஒட்டி இருந்தது. ஆனாலும், அவர் நிதானமாக ஆடி பின் வேகம் எடுத்தார். 44 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார் வில்லியம்சன்.

நாக் அவுட்

நாக் அவுட்

அதிரடி ஆட்டம் ஆடவில்லை என்றாலும் சரியாக நிதான ஆட்டம் ஆடி எங்கே ரன் குவிக்க வேண்டுமோ அங்கே ரன் குவித்து அபாரமாக செயல்பட்டார் வில்லியம்சன். அவரது ஆட்டத்தால் பெங்களூர் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஹைதராபாத்.

Story first published: Saturday, November 7, 2020, 0:22 [IST]
Other articles published on Nov 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+