Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன இது திடீர்னு.. விராட் கோலி எடுத்த தப்பான முடிவு.. முக்கியமான மேட்ச்சில் இப்படியா?

அபுதாபி : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் விராட் கோலி துவக்க வீரராக களமிறங்கி ஆச்சரியம் அளித்தார்.

வென்றே ஆக வேண்டிய நாக் அவுட் போட்டியில் விராட் கோலி தவறான முடிவு எடுத்து பேட்டிங் வரிசையை மாற்றி விட்டதாக ரசிகர்கள் கூறி வந்தனர்.

இதன் இடையே அவர் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இது பெங்களூர் அணிக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.

எலிமினேட்டர் போட்டி

எலிமினேட்டர் போட்டி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய பரபரப்பான எலிமினேட்டர் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் வென்றால் தான் இரண்டாம் தகுதிச் சுற்றுப் போட்டியில் மோதி இறுதிப் போட்டிக்கான பந்தயத்தில் கலந்து கொள்ள முடியும்.

பேட்டிங் வரிசை

பேட்டிங் வரிசை

எலிமினேட்டர் போட்டியில் தோல்வி அடையும் அணி நடையைக் கட்ட வேண்டியது தான். இந்த சூழ்நிலையில், பெங்களூர் அணியில் விராட் கோலி திடீரென நான்கு மாற்றங்களை செய்தார். அது கூட பரவாயில்லை என்றால், பேட்டிங் வரிசையையும் மாற்றி குழப்பினார்.

துவக்க வீரர்

துவக்க வீரர்

ஆரோன் பின்ச்சை அணியில் தேர்வு செய்த கோலி, அவரை முந்தைய போட்டிகளைப் போல துவக்க வீரராக ஆட வைக்காமல், தானே துவக்க வீரராக களமிறங்கினார். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. சரி எப்படியும் பெரிய இன்னிங்க்ஸ் ஆடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

கோலி அவுட்

கோலி அவுட்

ஆனால், விராட் கோலி 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் கோஸ்வாமியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முக்கியமான போட்டியில் இது பெங்களூர் அணிக்கு பெரும் அடியாக அமைந்தது.

தேவ்தத் படிக்கல்

தேவ்தத் படிக்கல்

மற்றொரு துவக்க வீரர் தேவ்தத் படிக்கல் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரும் ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து பெங்களூர் அணி அடி வாங்கியதால் அந்த அணியின் ரசிகர்கள் சோகம் அடைந்தனர். பேட்டிங் வரிசையை மாற்றியது தவறு என அவர்கள் கூறி வருகின்றனர்.

Story first published: Friday, November 6, 2020, 20:26 [IST]
Other articles published on Nov 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+