Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டீமை மாற்றி.. ஆர்டரை மாற்றி.. கோலி செய்த சொதப்பல்.. ஆர்சிபியை அதிர வைத்த சன்ரைசர்ஸ்!

அபுதாபி : 2020 ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டி அபுதாபியில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸில் தோற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை பெங்களூர் அணியால் சமாளிக்க முடியவில்லை.

டாஸ்

டாஸ்

இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்றார். போட்டியின் இரண்டாவது பகுதியில் பனிப்பொழிவு அதிகம் இருக்கும் என்பதால் அவர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். காயமடைந்த சாஹாவுக்கு பதில் கோஸ்வாமி அணியில் சேர்க்கப்பட்டார்.

கோலி செய்த முதல் சொதப்பல்

கோலி செய்த முதல் சொதப்பல்

பெங்களூர் அணியில் பெரும் அதிர்ச்சியாக இந்த நாக் அவுட் போட்டிக்கான அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டது. இது தான் விராட் கோலி செய்த முதல் தவறு. முக்கியமான போட்டி எனும் நிலையில், அணியை பெரிய அளவில் மாற்றினால் வீரர்கள் குழப்பம் அடையக் கூடும்.

பேட்டிங் ஆர்டர் மாற்றம்

பேட்டிங் ஆர்டர் மாற்றம்

ஆனாலும், அணியை மாற்றிய கோலி அத்துடன் பேட்டிங் ஆர்டரையும் மாற்றினார். கடந்த சில போட்டிகளில் அணியில் இடம் பெறாத ஆரோன் பின்ச்சை தேர்வு செய்த அவர், தானே துவக்க வீரராக இறங்கினார். துவக்க வீரர் பின்ச் மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்தார்.

கோலி எடுத்த ரன்கள்

கோலி எடுத்த ரன்கள்

பெங்களூர் அணி துவக்கம் முதலே விக்கெட்களை இழந்தது. "துவக்க வீரர்" கோலி 6 ரன்களில் ஆட்டமிழந்தார். தேவ்தத் படிக்கல் 1 ரன் மட்டுமே எடுத்து நடையைக் கட்டினார். அடுத்து வந்த பின்ச் - ஏபி டிவில்லியர்ஸ் அணியை மீட்க போராடினர்.

போராடிய ஏபிடி

போராடிய ஏபிடி

ஆரோன் பின்ச் 30 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். ஏபி டிவில்லியர்ஸ் மீண்டும் ஒரு முறை இந்த தொடரில் தனி ஆளாக அணியை மீட்க போராடினார். அவர் 43 பந்துகளில் 56 ரன்கள் குவித்தார். அவர் ஒரு சிக்ஸ் கூட அடிக்காதது வியப்பாக இருந்தது.

பின்வரிசை வீரர்கள்

பின்வரிசை வீரர்கள்

பெங்களூர் அணியின் மற்ற மிடில் ஆர்டர் வீரர்கள் மற்றும் பின் வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மொயீன் அலி 0, சிவம் துபே 8, வாஷிங்க்டன் சுந்தர் 5 ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி இரு ஓவர்களில் பேட்டிங் செய்த சைனி 9, சிராஜ் 10 ரன்கள் எடுத்து இருந்தனர்.

பெங்களூர் ஸ்கோர்

பெங்களூர் ஸ்கோர்

பெங்களூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. இது மிகவும் குறைவான ஸ்கோர் தான். அபுதாபியில் இந்த இலக்கை ஹைதராபாத் அணி எளிதாக எட்டும் என்றே விமர்சகர்கள் கூறினர். பிட்ச் பேட்டிங் செய்ய கடினமாக இருந்ததாகவும் சிலர் கூறினர்.

ஹோல்டர், நடராஜன் அபாரம்

ஹோல்டர், நடராஜன் அபாரம்

ஹைதரபாத் அணியின் ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்கள் சாய்த்தார். நடராஜன் ஒரே ஓவரில் வாஷிங்க்டன் சுந்தர் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் விக்கெட்டை சாய்த்து மிரட்டினார். அவர் 2 விக்கெட்கள் எடுத்தார். நதீம் 1 விக்கெட் எடுத்தார்.

Story first published: Friday, November 6, 2020, 22:21 [IST]
Other articles published on Nov 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+