Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஈ சாலாவும் கப்பு போச்சு.. கோட்டை விட்ட ஆர்சிபி.. மூட்டை முடிச்சை கட்டி ஊருக்கு அனுப்பிய வார்னர்!

அபுதாபி : 2020 ஐபிஎல் தொடரில் எப்படியாவது கோப்பை வென்று தங்கள் நீண்ட நாள் கனவை நிறைவேற்ற துடித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்.

அந்த அணி பிளே-ஆஃப் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் நாக்-அவுட் செய்யப்பட்டது.

விராட் கோலி எடுத்த சொதப்பல் முடிவுகளால் அந்த அணி தோல்வி அடைந்தது. ஈ சாலா கப் நம்தே என தொடர்ந்து கோலியை நம்பி வரும் ஆர்சிபி ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

போட்டியில் என்ன நடந்தது?

போட்டியில் என்ன நடந்தது?

2020 ஐபிஎல் தொடரின் பிளே-ஆஃப்சுற்றில் இரண்டாம் தகுதிப் போட்டிக்கு முன்னேறும் அணியை தேர்வு செய்யும் எலிமினேட்டர் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஹைதரபாத் அணி டாஸ் வென்று பெங்களூர் அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது.

சொதப்பல்

சொதப்பல்

பெங்களூர் அணியின் பேட்டிங் ஆர்டரை மாற்றினார் கோலி. அவரே துவக்க வீரராக கடந்த ஆண்டுகளைப் போல களமிறங்கினார். ஆனாலும், வெறும் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடந்த போட்டிகளில் கை கொடுத்த தேவ்தத் படிக்கல் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

டிவில்லியர்ஸ் போராட்டம்

டிவில்லியர்ஸ் போராட்டம்

டிவில்லியர்ஸ் கடந்த போட்டிகளைப் போல தனியாக அணியைக் காப்பாற்ற முயற்சி செய்தார். அவர் 43 பந்துகளில் 56 ரன்கள் குவித்தார். ஆரோன் பின்ச் 32 ரன்கள் சேர்த்தார். மற்ற பெங்களூர் வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.

குறைந்த ஸ்கோர்

குறைந்த ஸ்கோர்

20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. இது இந்த மைதானத்தில் குறைந்த ஸ்கோர் என விமர்சகர்கள் கூறினர். ஹைதராபாத் அணியின் ஹோல்டர் 3, நடராஜன் 2, நதீம் 1 விக்கெட் வீழ்த்தினர்.

ஹைதராபாத் நிதானம்

ஹைதராபாத் நிதானம்

அடுத்து 132 ரன்களை சேஸிங் செய்த ஹைதரபாத் அணி நிதானமாக சேஸிங் செய்யத் துவங்கியது. டேவிட் வார்னர் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். கோஸ்வாமி டக் அவுட் ஆனார். மனிஷ் பாண்டே 24 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ப்ரியம் கார்க் 14 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார்.

நங்கூரமாக நின்ற வில்லியம்சன்

நங்கூரமாக நின்ற வில்லியம்சன்

கேன் வில்லியம்சன் நங்கூரம் போட்டு நின்று ஒருநாள் போட்டி போல சற்று நிதான ஆட்டம் ஆடினார். தேவைப்படும் ரன் ரேட் 9க்கும் மேல் சென்றது. அப்போது தான் அவர் ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற நிலையை எட்டினார். அவருடன் ஹோல்டர் சிறப்பாக ஆடினார். ரன் ரேட் அழுத்தத்துக்கு ஈடு கொடுத்தது இந்த ஜோடி.

அசத்தல் வெற்றி

அசத்தல் வெற்றி

கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஹோல்டர் இரண்டு ஃபோர் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஹைதராபாத் அணி 19.4 ஓவர்களில் 132 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வில்லியம்சன் 50, ஹோல்டர் 24 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

கப்பு போச்சு

கப்பு போச்சு

ஈ சாலா கப் நம்தே என காத்திருந்த பெங்களூர் ரசிகர்கள் இந்த முறையும் கப்பு போச்சு என பரிதாபமாக பதிவுகள் போட்டு தங்கள் சோகத்தை வெளிப்படுத்தினர். இந்த போட்டியையும் சேர்த்து பெங்களூர் அணி தான் ஆடிய கடைசி ஐந்து போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது.

Story first published: Friday, November 6, 2020, 23:45 [IST]
Other articles published on Nov 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+