Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4 வீரர்களை நீக்கிய கோலி.. ஆர்சிபி அதிரடி மாற்றம்.. ரிஸ்க் எடுத்த கேப்டன்.. வார்னர் செம ஹேப்பி!

அபுதாபி : 2020 ஐபிஎல் தொடரின் பிளே-ஆஃப் சுற்று நடைபெற்று வருகிறது. இதில் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி டாஸ் வென்றது. அந்த அணியின் கேப்டன் வார்னர் டாஸ் வென்ற உடன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

கோலி பெங்களூர் அணியில் அதிரடியாக நான்கு மாற்றங்களை செய்து திகைக்க வைத்தார்.

டாஸ் வெற்றி

டாஸ் வெற்றி

எலிமினேட்டர் போட்டியில் தோல்வி அடைந்தால் அந்த அணி அத்துடன் 2020 ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறும். வெற்றி பெறும் அணி இரண்டாவது தகுதிப் போட்டியில் இறுதிப் போட்டியில் முன்னேற டெல்லி அணியுடன் மோதும். இந்த நிலையில், ஹைதராபாத் அணி இந்தப் போட்டியில் டாஸ் வென்றது.

சாஹா இல்லை

சாஹா இல்லை

டேவிட் வார்னர் டாஸ் வென்ற உடன் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஹைதராபாத் அணியில் கடந்த இரு போட்டிகளில் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த விரிதிமான் சாஹா அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் நீக்கப்பட்டார். அவருக்கு பதில் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி அணியில் சேர்க்கப்பட்டார்.

நான்கு வீரர்கள் மாற்றம்

நான்கு வீரர்கள் மாற்றம்

பெங்களூர் அணியில் அதிரடியாக நான்கு வீரர்கள் மாற்றப்பட்டனர். கிறிஸ் மோரிஸ் காயம் காரணமாக நீக்கப்பட்டார். ஜோஷ் பிலிப், ஷாபாஸ் அஹ்மது, இசுரு உடானா ஆகியோர் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதில் ஆரோன் பின்ச், நவ்தீப் சைனி, மொயீன் அலி, ஆடம் ஜாம்பா அணியில் சேர்க்கப்பட்டனர்.

கோலி என்ன சொன்னார்?

கோலி என்ன சொன்னார்?

டாஸில் தோற்ற பின் கோலி பேசுகையில், இது போன்ற முக்கியமான போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்து சேஸிங் செய்யும் அணிக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்றார் கோலி. கடந்த போட்டியில் மும்பை அணி அதே பாணியில் தான் வெற்றி பெற்றது.

Story first published: Friday, November 6, 2020, 19:38 [IST]
Other articles published on Nov 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+