Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன பவுலிங்!! அடிக்க ஆசைப்பட்டு ஏமாந்த ஏபிடி.. உறைந்து போன கோலி.. தரமான சம்பவம் செய்த தமிழக வீரர்!

அபுதாபி : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சேர்ந்த தமிழக வீரர் நடராஜன் முக்கிய விக்கெட்டை வீழ்த்தினார்.

கடைசி ஓவர்களில் ரன் மழை பொழிய காத்திருந்தார் ஏபி டிவில்லியர்ஸ். அவரை தன் யார்க்கரால் நிலைகுலைய வந்து மிடில் ஸ்டம்ப்பை பறக்க விட்டார் நடராஜன்.

பரபர போட்டி

பரபர போட்டி

2020 ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர் போட்டியில் ஹைதரபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தால் தொடரை விட்டே வெளியேற வேண்டும் என்ற நிலையில் இரு அணிகளும் திட்டமிட்டு களமிறங்கின.

பெங்களூர் தடுமாற்றம்

பெங்களூர் தடுமாற்றம்

பெங்களூர் அணியில் நான்கு வீரர்களை மாற்றிய கேப்டன் விராட் கோலி, தானே துவக்க வீரராக களமிறங்கி 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது விக்கெட்டை அடுத்து தேவ்தத் படிக்கல் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அவர்கள் விக்கெட்டை ஜேசன் ஹோல்டர் வீழ்த்தினார்.

ஏபிடி அதிரடி

ஏபிடி அதிரடி

பெங்களூர் அணி தடுமாறிய நிலையில் ஏபி டிவில்லியர்ஸ் மீண்டும் ஒரு முறை அணியை காப்பாற்ற போராடினார். முதலில் நிதான ஆட்டம் ஆடிய அவர் அடுத்து அதிரடிக்கு மாறினார். அப்போதும் கூட அவர் சிக்ஸ் அடிக்காமல் தான் ரன் குவித்தார்.

சுந்தர் அவுட்

சுந்தர் அவுட்

அரைசதம் கடந்த நிலையில், கடைசி மூன்று ஓவர்களில் அதிரடிக்கு தயார் ஆனார் டிவில்லியர்ஸ். 18வது ஓவரை வீசினார் நடராஜன். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் வாஷிங்க்டன் சுந்தர் விக்கெட்டை வீழ்த்தினார் நடராஜன்.

நடராஜன் வீசிய பந்து

நடராஜன் வீசிய பந்து

அடுத்து தன் யார்க்கர் பந்துவீச்சை தொடர்ந்த அவர் அந்த ஓவரின் 5வது பந்தையும் யார்க்கராக வீசினார். ஏபி டிவில்லியர்ஸ் அந்த பந்தை அடிக்க முயற்சி செய்தார். ஆனால், பந்தை தவறவிட்டார். பந்து மிடில் ஸ்டம்ப்பை பதம் பார்த்தது.

விராட் கோலி நிலை

விராட் கோலி நிலை

அனுபவ டிவில்லியர்ஸ் நடராஜனின் யார்க்கர் பந்தில் ஏமாந்து விக்கெட்டை பறிகொடுத்ததை பார்த்த விராட் கோலி அப்படியே அமைதியாக உறைந்து போய் காணப்பட்டார். பெங்களூர் அணியின் நிலை அப்போது மோசமாக இருந்தது.

பெங்களூர் ஸ்கோர்

பெங்களூர் ஸ்கோர்

பெங்களூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது. ஆரோன் பின்ச் 32, ஏபி டிவில்லியர்ஸ் 56 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோர் உயர காரணமாக இருந்தனர். பிட்ச் மோசமாக இருந்ததால் அடுத்து பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியும் தடுமாறியது.

Story first published: Friday, November 6, 2020, 23:37 [IST]
Other articles published on Nov 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+