For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த ஒரு கேட்ச்சால்.. மேட்ச் போச்சு.. தோல்விக்கு பின் விராட் கோலி புலம்பல்!

அபுதாபி : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் தோற்ற பின் விராட் கோலி அது பற்றி பேசுகையில் கேன் வில்லியம்சன் கேட்ச்சை பிடித்து இருந்தால் போட்டி மாறி இருக்கும் என்றார்.

இந்தப் போட்டியில் பெங்களூர் அணி மோசமாக பேட்டிங் ஆடிய நிலையில் தோல்வி அடைந்தது.

இந்த தோல்வி மூலம் பெங்களூர் அணி 2020 ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி உள்ளது.

பிரேயர் ஆன்ட்டி வந்தாச்சு.. செம குஷியில் மும்பை இந்தியன்ஸ்.. அட யாருப்பா அந்த லக்கி ஆன்ட்டி?பிரேயர் ஆன்ட்டி வந்தாச்சு.. செம குஷியில் மும்பை இந்தியன்ஸ்.. அட யாருப்பா அந்த லக்கி ஆன்ட்டி?

பெங்களூர் சொதப்பல்

பெங்களூர் சொதப்பல்

இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்து 131 ரன்கள் குவித்தது. அந்த அணி தடுமாறி 7 விக்கெட்களை இழந்தது. குறைவான ஸ்கோர் எடுத்த போதே அந்த நி வெற்றி பெறுவது கடினம் என விமர்சகர்கள் கூறினர்.

சேஸிங்

சேஸிங்

அடுத்து ஹைதராபாத் அணி சேஸிங் செய்தது. அந்த அணியின் டேவிட் வார்னர் 17, கோஸ்வாமி டக் அவுட் ஆனார்கள். அடுத்து கேன் வில்லியம்சன் பொறுப்பாக ஆடி அணியை வெற்றி பெற வைக்க போராடினார். அவர் நிதான ஆட்டம் ஆடினார்.

கேன் வில்லியம்சன் கொடுத்த கேட்ச்

கேன் வில்லியம்சன் கொடுத்த கேட்ச்

அவர் விக்கெட்டை கைப்பற்றினால் வெற்றிக்கு அருகே செல்லலாம் என்பதால் பெங்களூர் அணி போராடியது. கேன் வில்லியம்சன் சிக்ஸ் அடிக்க முயற்சி செய்தார். அந்த பந்தை பிடிக்க பவுண்டரி எல்லையில் இருந்த தேவ்தத் படிக்கல் முயற்சி செய்தார். எனினும், தவறவிட்டார்.

வெற்றி

வெற்றி

அந்த கடினமான கேட்ச்சை பிடித்து இருந்தால் போட்டி திசை மாறி இருக்கும். கேன் வில்லியம்சன் அதன் பின் அரைசதம் அடிக்க, ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூர் அணி நாக் அவுட் செய்யப்பட்டது.

கோலி என்ன சொன்னார்?

கோலி என்ன சொன்னார்?

விராட் கோலி இந்தப் போட்டியின் முடிவில் அந்த கேட்ச்சை மட்டும் பிடித்து இருந்தால் போட்டி மாறி இருக்கும் என் புலம்பினார். எனினும், பெங்களூர் அணி அதிக ஸ்கோர் அடிக்காததே தோல்விக்கு முக்கிய காரணம். 150 ரன்கள் அடித்து இருந்தாலும் அந்த அணி வெற்றி பெற வாய்ப்பு இருந்தது.

Story first published: Saturday, November 7, 2020, 11:45 [IST]
Other articles published on Nov 7, 2020
English summary
IPL 2020 Eliminator SRH vs RCB : Virat Kohli complains dropped catch of Kane Williamson
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X