மே 3ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகளுக்கு வாய்ப்பே இல்லை
டெல்லி: ஐபிஎல் போட்டிகள் மேலும் தள்ளிப் போகின்றன. ஏப்ரல் 15ம் தேதிக்கு போட்டித் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நாடு முழுவதும் ஊரடங்கை மே 3ம் தேதி வரை பிரதமர் நரேந்திர மோடி நீட்டித்துள்ளதால் ஐபிஎல் போட்டிகளும் தள்ளிப் போகவுள்ளன.
Recommended Video
இதுகுறித்து பிசிசிஐ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. ஆனால் மே 3ம் தேதி வரை போட்டிகள் நடைபெறாது என்ற முடிவை பிசிசிஐ எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடப்பு ஆண்டு ஐபிஎல் சீசனை நடத்த முடியாத அளவுக்கு கொரோனாவைரஸ் பரவல் பயங்கரமாக உள்ளது. உலக அளவில் அனைத்துப் போட்டிகளும் இதனால் ஸ்தம்பித்துப் போயுள்ளன. இந்தியாவிலும் ஏப்ரல் 15ம் தேதிக்கு ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தற்போது பிரதமர் நரேந்திர மோடி ஊரடங்கை மே 3ம் தேதி வரை நீட்டித்து விட்டார்.
இதன் காரணமாக ஐபிஎல் போட்டிகளும் மே 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் பிசிசிஐ வெளியிடாமல் உள்ளது. ஆனால் முடிவு எடுக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறுகையில், தற்போதைய நிலையில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவது இயலாத காரியம். வீரர்கள் மற்றும் ரசிகர்களின் நலன்தான் முக்கியம்.
தற்போதைய நிலையில் எந்த பெரிய மாற்றமும் ஏற்படவில்லை. மேலும் பிரதமர் நரேந்திர மோடியும் ஊரடங்கு உத்தரவை மே 3ம்தேதி வரை நீட்டித்துள்ளார். மே 3ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகளை நடத்துவது சிரமம் என்றார் அவர். போட்டிகளை எப்படி நடத்துவது என்பது குறித்து வாரிய உறுப்பினர்கள், ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுடன் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஆலோசனை நடத்தவுள்ளார். அதன் பின்னர் அதிகாரப்பூர்வ முடிவு அறிவிக்கப்படும்.


Click it and Unblock the Notifications