Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியை இனிமே எப்படி டீம்ல எடுப்பீங்க? இனிமே இவர் தான் விக்கெட் கீப்பர்.. முன்னாள் வீரர் அதிரடி!

மும்பை : ஐபிஎல் நடக்காமல் போனால் தோனியால் இந்திய அணியில் இடம் பெற முடியாது என கூறி உள்ளார் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர்.

Recommended Video

IPL 2020 : Gambhir names replacement of Dhoni

இந்த நிலையில், தோனிக்கு மாற்றாக இந்திய அணியில் எந்த வீரர் இருப்பார் என கணித்துள்ளார் கம்பீர்.

தோனியை இனி எந்த வகையில் அணியில் தேர்வு செய்ய முடியும் என்றும் அதிரடியாக கூறி உள்ளார்.

இந்திய அணியில் ஆடவில்லை

இந்திய அணியில் ஆடவில்லை

தோனி கடந்த ஓராண்டாக இந்திய அணியில் இடம் பெறவில்லை. இனி அவர் இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்றால் அவர் தன்னை 2020 ஐபிஎல் தொடரில் நிரூபிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால், அதற்கும் சிக்கல் வந்தது.

கொரோனா வைரஸ் சிக்கல்

கொரோனா வைரஸ் சிக்கல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஐபிஎல் தொடர் நடக்கவே வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.

தோனி வருவது கடினம்

தோனி வருவது கடினம்

இந்த நிலையில், கௌதம் கம்பீர் தோனியின் வாய்ப்பு மற்றும் அடுத்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் பற்றியும் கூறி உள்ளார். "ஐபிஎல் நடக்காவிட்டால் தோனி மீண்டும் அணிக்கு வருவது கடினம். கடந்த ஒன்றரை வருடமாக அவர் ஆடாத நிலையில், எந்த அடிப்படையில் அவரை அணியில் தேர்வு செய்வீர்கள்" என கேட்டுள்ளார் கம்பீர்.

மாற்று வீரர்

மாற்று வீரர்

"தோனியின் வாய்ப்பு குறைவாக உள்ளது. இப்போது இந்திய அணியில் யார் சிறப்பாக ஆடுகிறார்களோ, யாரால் போட்டிகளில் வெற்றி தேடிக் கொடுக்க முடியுமோ அவர் இந்திய அணிக்காக ஆட வேண்டும்" எனவும் கூறி தோனிக்கு அடுத்த வீரரை தேர்வு செய்ய வேண்டும் என கூறினார் கம்பீர்.

ரிஷப் பண்ட் சொதப்பல்

ரிஷப் பண்ட் சொதப்பல்

தோனிக்கு அடுத்து ரிஷப் பண்ட் தான் அணியின் முதன்மை விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் என கூறப்பட்டு வந்தது. ஆனால், அவர் சொதப்பலாக ஆடி வந்தார். இந்த நிலையில், அவருக்கு ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் காயம் ஏற்பட்ட போது ராகுல் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொண்டார்.

ராகுல் அபாரம்

ராகுல் அபாரம்

அப்போது முதல் ராகுல் மிக சிறப்பாக விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் செய்து வருகிறார். அவரை தொடர்ந்து டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஆக பயன்படுத்த திட்டமிட்டுள்ளார் கேப்டன் விராட் கோலி.

தோனி அளவுக்கு இல்லை

தோனி அளவுக்கு இல்லை

இது பற்றி பேசிய கம்பீர், "தோனிக்கு சிறந்த மாற்று வீரராக கேஎல் ராகுல் தான் இருப்பார். அவர் விக்கெட் கீப்பிங் செய்ய ஆரம்பித்ததில் இருந்து அவரது செயல்பாட்டை கண்டு வருகிறேன். அவரது கீப்பிங் தோனி அளவுக்கு இல்லை. ஆனால், டி20 கிரிக்கெட்டில் அவர் எந்த இடத்திலும் பேட்டிங் செய்யும் சிறந்த வீரராக இருக்கிறார்" என அவரை ஆதரித்து பேசினார்.

Story first published: Monday, April 13, 2020, 23:57 [IST]
Other articles published on Apr 13, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+