Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஹா.. வசமாக மஞ்ச கலர் டிரஸ்ஸில் சிக்கிய கோலி.. செமயாக கலாய்த்து விட்ட டர்பனேட்டர்!

டெல்லி : விராட் கோலி ஒரு விளம்பரத்திற்காக மஞ்சள் நிற உடையில் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

2020 ஐபிஎல் தொடர் விரைவில் நடக்க உள்ள நிலையில், அதை வைத்து கோலியை கலாய்த்து இருக்கிறார் ஹர்பஜன் சிங்.

இதன் மூலம் ஐபிஎல் பரபரப்பு மேலும் கூடி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மஞ்சள் நிற உடை அணியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சி

பயிற்சி

கடந்த மார்ச் மாதம் துவங்க வேண்டிய 2020 ஐபிஎல் தொடர் நீண்ட இடைவெளிக்கு பின் வரும் செப்டம்பர் 19 அன்று துவங்க உள்ளது. அந்த தொடருக்காக ஐபிஎல் அணிகள் ஆகஸ்ட் மத்தியில் இருந்து பயிற்சிகளை துவக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல்

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல்

இந்த முறை ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. அங்கே உள்ள மூன்று மைதானங்களில் எட்டு அணிகளும் போட்டிகளில் பங்கேற்க உள்ளன. போட்டி அட்டவணை இன்னும் வெளியாகவில்லை.

ரசிகர்கள் ஆர்வம்

ரசிகர்கள் ஆர்வம்

இந்த நிலையில், ஐபிஎல் அணிகளின் ரசிகர்கள் இடையே ஆன போட்டி சமூக வலைதளங்களில் துவங்கி விட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் வழக்கம் போல தோனி குறித்து பதிவிட்டு தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

விளம்பர புகைப்படம்

விளம்பர புகைப்படம்

இந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு விளம்பர புகைப்படம் ஒன்றை தன் சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார். அதில் ஒரு ஷூ குறித்த விளம்பரம் இடம் பெற்று இருந்தது.

மஞ்சள் உடை

மஞ்சள் உடை

ஷூவை போன் போல காதில் வைத்துக் கொண்டு இருந்தார். முழுவதும் மஞ்சள் நிற ஆடையில் இருந்தார் விராட் கோலி. சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களும் மஞ்சள் நிற உடையைத் தான் அணிவார்கள். இதை வைத்துத் தான் கலாய்த்துள்ளார் ஹர்பஜன் சிங்.

என்ன சொன்னார்?

என்ன சொன்னார்?

ஹர்பஜன் சிங் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தான் ஆடி வருகிறார். அவர் விராட் கோலி பதிவை குறிப்பிட்டு இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கென்றே உருவாக்கிய உடை போல இருக்கிறது என கலாய்த்துள்ளார்.

ஹர்பஜன் சிங் பங்கு

ஹர்பஜன் சிங் பங்கு

ஐபிஎல் என்றாலே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை கலாய்க்க பெரும் கூட்டம் திரளும். கடந்த இரண்டு சீசன்களில் அந்த அணி படு மோசமாக செயல்பட்டு வருவதே அதற்கு காரணம். ஹர்பஜன் சிங் தன் பங்கிற்கு அந்த அணியின் கேப்டனை கிண்டல் செய்துள்ளார்.

Story first published: Saturday, July 25, 2020, 19:33 [IST]
Other articles published on Jul 25, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+