என்னோட ரெண்டு ஏஞ்சல்சை மிஸ் செய்கிறேன்... என்ன செய்யறது கடமை அழைக்குது
துபாய் : மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் இந்த ஐபிஎல் போட்டிகளில் பஙகேற்கவுள்ளார் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா
Recommended Video
சமீபத்தில் இவருக்கும் பாலிவுட் நடிகை நடாஷா ஸ்டான்கோவிக்கிற்கும் ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில் தற்போது அவர்களை பிரிந்து துபாய்க்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய இரண்டு தேவதைகளையும் பிரிந்து வாடுவதாக அவர் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
இந்த ஐபிஎல் 2020 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடவுள்ள ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, இதையொட்டி துபாய்க்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு குவாரன்டைனில் ஈடுபட்டுள்ள அவர், நடாஷாவுடன் வீடியோ காலில் பேசியுள்ளார். அந்த அழைப்பின் ஸ்கிரீன் ஷாட்டை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், தன்னுடைய இரு தேவதைகளை மிஸ் செய்வதாக குறிப்பிட்டுள்ளார். அந்த படத்தில் அவருடைய குழந்தை தூங்கி கொண்டுள்ளது.

இதையடுத்து இந்த படத்திற்கு அவருடைய நெருங்கிய நண்பர் கே.எல். ராகுல், தினேஷ் கார்த்திக் உள்ளிட்டவர்கள் கமெண்ட் செய்து பாராட்டியுள்ளனர். இதனிடையே இந்த புகைப்படத்தில் கமெண்ட் செய்துள்ள நடாஷா, நாங்கள் உங்களை விரும்புகிறோம் மற்றும் மிஸ் செய்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications