Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனி ஓசியில் ஐபிஎல் மேட்ச் பார்க்க முடியாது.. ரூ.399 கட்டணும்.. பணத்தை எடுத்து வைச்சுக்குங்க!

மும்பை : 2020 ஐபிஎல் தொடரை போகும் இடம் எல்லாம் கட்டணம் இல்லாமல் ஸ்மார்ட்போனில் பார்த்து ரசிக்கலாம் என எண்ணிய ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி காத்துக் கொண்டு இருக்கிறது.

Recommended Video

ஐபிஎல் போட்டிகளை கட்டணம் செலுத்தி மட்டுமே பார்க்க முடியும் - ஹாட்ஸ்டார் அறிவிப்பு

ஆம், இந்த சீசன் ஐபிஎல் தொடரை கட்டணம் இல்லாமல் டிஸ்னி + ஹாட்ஸ்டார் செயலியில் பார்க்க முடியாது.

இது பல ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தியாக அமைந்தது. இதனால், செயலியில் ஐபிஎல் தொடரை பார்க்கும் ரசிகர்கள் எண்ணிக்கை வெகுவாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக மக்கள் பார்க்கும் நிகழ்ச்சி

அதிக மக்கள் பார்க்கும் நிகழ்ச்சி

இந்தியாவில் அதிக மக்கள் பார்க்கும் நிகழ்ச்சி ஐபிஎல் தொடர் தான். தொலைக்காட்சி மட்டுமின்றி ஸ்மார்ட்போன்களிலும் கோடிக்கணக்கான மக்கள் ஐபிஎல் தொடரை கண்டு வருகிறார்கள். இந்த ஆண்டும் ஐபிஎல் தொடருக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஐபிஎல் ஒளிபரப்பு

ஐபிஎல் ஒளிபரப்பு

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிகளிலும், ஹாட்ஸ்டார் செயலியிலும் ஐபிஎல் தொடர் ஒளிபரப்பானது. தொலைக்காட்சியில் பார்க்க சாதாரண கேபிள் கட்டணம் செலுத்த வேண்டும். செயலியில் பார்க்க இணைய இணைப்பு சந்தா கட்டி இருந்தால் போதும்.

தொலைக்காட்சியில் இலவசம்

தொலைக்காட்சியில் இலவசம்

ஆனால், இந்த ஆண்டு தொலைக்காட்சியில் இலவசமாக பார்க்கலாம். ஆனால், ஹாட்ஸ்டார் செயலியில் பார்க்க விரும்புபவர்கள் சந்தா கட்ட வேண்டும் என கூறி உள்ளது ஸ்டார் குழுமம். இதில் குறைந்தபட்ச சந்தா 399 ரூபாய் ஆகும்.

எவ்வளவு கட்டணம்?

எவ்வளவு கட்டணம்?

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் செயலியில் விஐபி திட்டத்தில் ஆண்டுக்கு 399 ரூபாய் சந்தா கட்டி இருப்பவர்களும், ப்ரீமியம் திட்டத்தில் ஆண்டுக்கு 1499 ரூபாய் சந்தா கட்டியவர்களும் மட்டுமே ஐபிஎல் தொடரை நேரலையில் பார்க்க முடியும் என ஸ்டார் குழுமம் கூறி உள்ளது.

வேற வழியே இல்லையா?

வேற வழியே இல்லையா?

இது சாதாரண ரசிகர்கள் பலருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இனி தொலைக்காட்சி முன் மட்டும் தான் அமர்ந்து ஐபிஎல் போட்டிகளை பார்க்க முடியுமா? வேறு வழியே இல்லையா? ஒரே ஒரு எளிய வாய்ப்பை வழங்கி உள்ளது ஹாட்ஸ்டார்.

ஏர்டெல், ஜியோ

ஏர்டெல், ஜியோ

ஏர்டெல் மற்றும் ஜியோவுடன் இணைந்தும் ஹாட்ஸ்டார் ஆண்டு சந்தாதாரராக மாற முடியும். அதன் மூலம் ஐபிஎல் போட்டிகளை நேரலையில் பார்க்கலாம். ஏர்டெல் மற்றும் ஜியோவின் குறிப்பிட்ட தொலைபேசி திட்டங்களில் இந்த வாய்ப்பை பெறலாம்.

எண்ணிக்கை குறைவாக இருக்கும்

எண்ணிக்கை குறைவாக இருக்கும்

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நடுவே 2020 ஐபிஎல் தொடர் நடக்க இருப்பதால் பெரும்பாலான மக்கள் வீட்டில் இருந்தபடியே ஐபிஎல் தொடரை பார்ப்பார்கள். பணிக்கு செல்லும் மக்கள் குறைவாக இருப்பதால் ஸ்மார்ட்போன் மூலம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சாதனை படைத்த போட்டி

சாதனை படைத்த போட்டி

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியை பல கோடி மக்கள் பார்த்தனர். உலக அளவில் அது பெரிய சாதனை படைத்தது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரைப் பார்க்க பணம் செலுத்த வேண்டும் என்பதால், அந்த சாதனை இந்த ஆண்டு நடக்காது.

Story first published: Monday, September 7, 2020, 20:27 [IST]
Other articles published on Sep 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+