Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரெய்னாவை கிண்டல் செய்தார்.. அதனால் தான் அவருக்கு ஸ்பெஷல் கவனிப்பா? சிஎஸ்கே அணியில் பரபர சர்ச்சை

துபாய் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மோசமான தோல்விகளை அடுத்து தொடர்ந்து சலசலப்பு எழுந்து வருகிறது.

மோசமான பார்மில் இருக்கும் கேதர் ஜாதவ்வுக்கு எப்படி சிஎஸ்கே அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்து வருகிறது என்ற கேள்விக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணியில் இருந்து விலகிய மறுநாள், கேதர் ஜாதவ், ரெய்னாவை குத்திக் காட்டி கிண்டல் செய்வது போல ஒரு ட்வீட் போட்டு இருந்தார்.

விரிசலா?

விரிசலா?

அது பற்றி இப்போது மீண்டும் சில ரசிகர்களால் பேசப்படுகிறது. சிஎஸ்கே அணியில் முன்பே விரிசல் ஏற்பட்டு இருக்குமா? என்ற கேள்வியையும் இது கிளப்பி விட்டுள்ளது. ரெய்னா குறித்து ஜாதவ் ஏன் அப்படி ஒரு ட்வீட் போட வேண்டும்?

சுரேஷ் ரெய்னா விலகல்

சுரேஷ் ரெய்னா விலகல்

2020 ஐபிஎல் தொடருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் ஒரு வார பயிற்சி முகாமில் பங்கேற்று, தயாராகி துபாய் சென்றது. அங்கே குவாரன்டைனில் இருந்த போது சுரேஷ் ரெய்னா திடீரென ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்தது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

ரெய்னா தனக்கு அளிக்கப்பட்ட ஹோட்டல் அறை குறித்து குறை கூறினார் என முதலில் கூறப்பட்டது. அதன் பின் அவர் குவாரன்டைன் விதிகளை மீறினார் என்றும் கூறப்பட்டது. எது உண்மை என கடைசி வரை தெரியவில்லை. ஆனால், சிஎஸ்கே நிர்வாகம் மற்றும் தோனி அவர் மீது அதிருப்தி அடைந்து அவரை வெளியேற்றியது மட்டுமே உறுதியாக தெரிந்தது.

ஜாதவ் கிண்டல்

ஜாதவ் கிண்டல்

ரெய்னா விலகிய மறுநாள் கேதர் ஜாதவ் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை பதிவிட்டு சிறப்பான இடத்தை அடைய செல்லும் போது அதை விட்டு விலக ஆயிரம் காரணம் இருக்கும். ஆனால், அதை தொடர்ந்து செல்ல ஒரு காரணம் மட்டுமே இருக்கும் எனக் கூறி ரெய்னாவை குத்திக் காட்டி இருந்தார்.

சிஎஸ்கே தோல்விகள்

சிஎஸ்கே தோல்விகள்

பின் ஐபிஎல் லீக் சுற்றில் சிஎஸ்கே பங்கேற்றது. அதில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து சிஎஸ்கே அணி மோசமான நிலையை அடைந்தது. 10 லீக் போட்டிகளில் பங்கேற்று அதில் 7 தோல்விகளை சந்தித்தது. பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது.

ஜாதவ் சொதப்பல்

ஜாதவ் சொதப்பல்

சிஎஸ்கே அணியில் மிக மோசமாக சொதப்பிய வீரர் கேதர் ஜாதவ் தான். அவர் மிக மோசமாக செயல்பட்டார். சேஸிங்கில் கடைசி நேரத்தில் இறங்கி பவுண்டரி அடிக்காமல் சிங்கிள் ரன் எடுத்து அணியை தோல்வி அடைய வைத்தார். ஒவ்வொரு முறையும் அவரால் பேட்டிங் செய்ய முடியவில்லை என்பது வெட்ட வெளிச்சமாக தெரிந்தது.

மீண்டும், மீண்டும் வாய்ப்பு

மீண்டும், மீண்டும் வாய்ப்பு

ஆறு போட்டிகளுக்கு பின் கடும் விமர்சனம் எழுந்ததை அடுத்து ஜாதவ் அணியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால், இரண்டு போட்டிகள் கழித்து மீண்டும் அவரை அணியில் சேர்த்தார் கேப்டன் தோனி. அதன் பின்னும் அவர் சொதப்பல் ஆட்டம் ஆடி வெறுப்பேற்றினார்.

தோனி ஏன் வாய்ப்பு அளித்தார்?

தோனி ஏன் வாய்ப்பு அளித்தார்?

ஜாதவ் சுத்தமாக பார்மில் இல்லை. சிறிய அளவுக்கு கூட எந்தப் போட்டியிலும் அணியின் வெற்றிக்காக அவர் முயற்சி செய்யவில்லை. அதன் பின்னும் ஏன் தோனி அவரை தொடர்ந்து அணியில் தேர்வு செய்தார்? அவருக்கு வாய்ப்பு அளிக்க காரணம் என்ன?

சிஎஸ்கே அணியில் விரிசல்?

சிஎஸ்கே அணியில் விரிசல்?

ஜாதவ், ரெய்னாவை குத்திக் காட்டி கிண்டல் செய்த போதே அணியில் ஏதோ தவறு இருப்பதாக சந்தேகம் எழுந்தது. தோனியின் நெருக்கமான வீரர்கள் பட்டியலில் ஜாதவ் தொடர்ந்து இடம் பெற்று வருபவர். அவர் அப்படி ஒரு ட்வீட் போடுகிறார் என்றால் நிச்சயம் ரெய்னாவுடன் பெரிய விரிசல் ஏற்பட்டு இருக்க வேண்டும். மேலும், இப்படி ஒரு ட்வீட் போட்ட ஒருவருக்கு தோனி தொடர்ந்து வாய்ப்பு அளித்ததும் இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

நிர்வாகம் கோபம்

நிர்வாகம் கோபம்

மேலும், அணியில் தோனி தனக்கு பிடித்த வீரர்களை தனியாக கவனித்து வருகிறாரோ? என்ற சந்தேகத்தையும் இது ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே சிஎஸ்கே அணி நிர்வாகம் ஜாதவ் உட்பட மோசமாக செயல்பட்ட அனைத்து வீரர்கள் மீதும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

Story first published: Thursday, October 22, 2020, 17:57 [IST]
Other articles published on Oct 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+