Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சுப்மன் கில் நல்லா பாடுவாரு... கேகேஆர் அணி வீரர்களை உற்சாகப்படுத்திய குவிஸ், பாடல்கள்

அபுதாபி : ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக கடந்த மாதம் 20ம் தேதியே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி யூஏஇ பயணத்தை மேற்கொண்டது.

அவர்களை அபுதாபியில் தங்கவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், துபாய் போலல்லாமல், அபுதாபியில் 14 நாட்கள் குவாரன்டைனில் இருக்க வேண்டும் என்ற விதி அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக அணியின் சிஇஓ வெங்கி மைசூர் தெரிவித்துள்ளார்.

வெபினார் ஒன்றில் பேசிய வெங்கி மைசூர், ஆனால் 6 நாட்களில் தங்களது அணி வீரர்கள் பயிற்சிகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டதாகவும் ஆனால் அந்த 6 நாட்கள் குவாரன்டைன் அவ்வளவு எளிதானதாக இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 20ம் தேதி யூஏஇ பயணம்

கடந்த 20ம் தேதி யூஏஇ பயணம்

ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு யூஏஇயில் வரும் 19ம் தேதி துவங்கவுள்ளது. இதை முன்னிட்டு கடந்த மாதம் 20ம் தேதியையொட்டி 8 அணிகளை சேர்ந்த வீரர்களும் யூஏஇ பயணம் மேற்கொண்டனர். கடந்த மாதம் 20ம் தேதியே 2 முறை ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் யூஏஇக்கு தங்களது பயணத்தை துவக்கினர்.

அபுதாபியில் பயிற்சிகள்

அபுதாபியில் பயிற்சிகள்

அவர்களை அபுதாபியில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், துபாயில் இருப்பது போல, அங்கு குவாரன்டைன் விதிமுறைகள் தளர்வாக இல்லாததை அங்கு சென்றவுடன்தான் தாங்கள் புரிந்து கொண்டதாக அணியின் சிஇஓ வெங்கி மைசூர் தெரிவித்துள்ளார். பின்னர் சுகாதாரத்துறையுடன் பேசியபொழுது, தங்களது குவாரன்டைனை 6 நாட்களுக்குள் முடித்துக் கொண்டு பயிற்சிகளில் ஈடுபடும்வகையில் பிசிசிஐ ஏற்பாடுகளை செய்திருந்தது தெரியவந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆன்லைனில் நிகழ்ச்சிகள்

ஆன்லைனில் நிகழ்ச்சிகள்

ஆனால் அந்நிய தேசத்தில் 6 நாட்கள் குவாரன்டைனை கழிப்பது எளிதானதாக இல்லை என்றும் மைசூர் கூறியுள்ளார். அதற்கென தாங்கள் ஆன்லைனில் குவிஸ் நிகழ்ச்சிகள், அந்தாக்ஷிரி போன்றவற்றை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்தகைய நிகழ்ச்சிகள் மூலம் அணியின் வீரர்களை தாங்கள் உற்சாகமாக வைத்துக் கொண்டதாகவும் அவர் கூறினார்.

சுப்மன் கில் நல்ல பாடகர்

சுப்மன் கில் நல்ல பாடகர்

அனைத்து வீரர்களும் கிரிக்கெட்டில் சிறப்பாக உள்ளதுபோல பாட்டு பாடுவதில் அவ்வளவு சிறப்பானவர்களாக இல்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார். அணியின் ரிங்கு சிங் மிகவும் மோசமான பாடகராக இருந்ததாகவும் அவர் நகைப்புடன் தெரிவித்தார். அவர் பாடும்போது கட்டில்மீது ஏறி எந்த கட்டுப்பாடும் இன்றி ஆட்டம் போடுவார் என்றும் கூறினார். ஆனால் சுப்மன் கில் நல்ல பாடகர் என்றும் தெரிவித்தார்.

Story first published: Tuesday, September 15, 2020, 20:40 [IST]
Other articles published on Sep 15, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+