Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி கண்டிப்பா விளையாடுவார்... அவரோட ஆட்டத்த பார்க்க காத்துக்கிட்டிருக்கேன்

டெல்லி : ஐபிஎல் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் ஐபிஎல்லின் சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஆட்டத்தை காண ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

IPL 2020: Indian Badminton Star Looking Forward To Seeing MS Dhoni Play Again

வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் நவம்பர் 8ம் தேதிவரை யூஏஇயில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளதாக அதன் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 29ம் தேதி துவங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலக கோப்பையை தள்ளிவைத்து ஐசிசி அறிவித்துள்ளது. இதையடுத்து வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் நவம்பர் 8ம் தேதிவரை ஐபிஎல் போட்டிகள் யூஏஇயில் நடைபெறவுள்ளதாக அதன் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

இந்த தொடரில் தோனியின் ஆட்டத்தை காண சர்வதேச அளவில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதற்கு சாதாரண ரசிகர்கள் முதல் சக வீரர்கள் உள்ளிட்ட யாரும் விதிவிலக்கில்லை. இந்நிலையில் பேட்மிண்டன் வீரர் கடாம்பி ஸ்ரீகாந்த், ஐபிஎல் அறிவிப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

IPL 2020: Indian Badminton Star Looking Forward To Seeing MS Dhoni Play Again

தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள ஸ்ரீகாந்த், இந்த தொடரில் தோனியின் ஆட்டத்தை மீண்டும் காண தான் ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, July 25, 2020, 16:21 [IST]
Other articles published on Jul 25, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+