Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது என்னய்யா புதுப் புரளியா இருக்கு.. ஐபிஎல் நடக்காம போனதுக்கு காரணம் “டெவில்”.. பரவும் தகவல்!

மும்பை : 2020 ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெறுமா? என்ற சந்தேகம் உள்ளது.

Recommended Video

IPL நடக்காம போனதுக்கு Devil தான் காரணம்... தீயாக பரவும் வதந்தி

இந்த நிலையில், ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு நடக்காமல் போவதற்கு "டெவில்" தான் காரணம் என சிலர் கிளப்பி விட்டு வருகிறார்கள்.

மார்ச் 13 முதல் எந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியும் நடக்காமல் போனதற்கும் இதே டெவில் மீதும், ஒரு ராசி இல்லாத எண் மீதும் பழியைப் போடுகிறார்கள்.

13ஆம் எண் என்றால் என்ன?

13ஆம் எண் என்றால் என்ன?

13ஆம் எண் என்பது ராசி இல்லாத எண் என்றும், டெவில் எனும் மோசமான சக்தியின் எண் என்றும் மேற்கத்திய கலாச்சாரத்தில் நம்பப்படுகிறது. பல அசம்பாவித சம்பவங்களுக்கும் 13ஆம் எண்ணிற்கும் உள்ள சம்பந்தத்தை இதற்கு முன் பலரும் பல முறை சுட்டிக் காட்டி உள்ளனர்.

இதுதான் காரணம்

இதுதான் காரணம்

இந்த நிலையில், அதே ராசி இல்லாத 13ஆம் எண் தான் கிரிக்கெட் உலகையும் ஆட்டிப் படைக்கிறது என்கிறார்கள். கொரோனா வைரஸ் காரணமாக ஸ்தம்பித்துப் போய் உள்ள கிரிக்கெட் உலகத்திற்கும் 13ஆம் எண்ணிற்கும் என்ன சம்பந்தம்? ஐபிஎல் தொடருக்கும் 13ஆம் எண்ணிற்கும் என்ன சம்பந்தம்?

கடைசி போட்டி நடந்த தேதி

கடைசி போட்டி நடந்த தேதி

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் தடை படும் முன் முழுமையாக நடந்த போட்டி ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையே ஆன ஒருநாள் போட்டி. அது நடந்த நாள் மார்ச் 13. அந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 200 ரன்களுக்கு 13 ரன்கள் குறைவாக எடுத்து, அதாவது 187 ரன்கள் எடுத்து ஆல் - அவுட் ஆகி இருந்தது.

போட்டி நடக்கவில்லை

போட்டி நடக்கவில்லை

இந்த 13ஆம் எண் சம்பந்தப்பட்ட சர்வதேச கிரிக்கெட் போட்டிக்குப் பின் எந்த கிரிக்கெட் போட்டியும் நடக்கவில்லை. அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்யப்பட்டது. ஐபிஎல்-லுக்கும் இதே நிலை தான்.

ஐபிஎல் தள்ளிவைப்பு

ஐபிஎல் தள்ளிவைப்பு

மார்ச் 29 அன்று துவங்க வேண்டிய 13வது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது அடுத்த அறிவிப்பு வரும் வரை, கால வரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 13வது சீசன் என்பதால் தான் ஐபிஎல் தொடருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் கூறுகிறார்கள்.

நல்ல காலம் இல்லை

நல்ல காலம் இல்லை

இதெல்லாம் நம்புவதா? வேண்டாமா? ஒரே குழப்பமா இருக்கே? என்றுதான் தோன்றுகிறது. எது எப்படியோ அடுத்த சில மாதங்கள் கிரிக்கெட்டுக்கு நல்ல காலம் இல்லை. பெரும்பாலும் சர்வதேச போட்டிகள் மற்றும் முக்கியமான ஐபிஎல் தொடர் நடக்க வாய்ப்பே இல்லை.

Story first published: Wednesday, April 15, 2020, 21:03 [IST]
Other articles published on Apr 15, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+