2020 ஐபிஎல் பிளே-ஆஃப், இறுதிப் போட்டி அட்டவணை.. முழு விவரம் வெளியானது!
துபாய் : 2020 ஐபிஎல் தொடருக்கான பிளே-ஆஃப் போட்டி அட்டவணை வெளியானது. இறுதிப் போட்டி அட்டவணையும் வெளியாகி உள்ளது.
இந்தா சீசன் ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைய இன்னும் 10 போட்டிகளே மீதமிருக்கும் நிலையில் பிசிசிஐ பிளே-ஆஃப் அட்டவணையை வெளியிட்டுள்ளது.
நவம்பர் 5 முதல் பிளே-ஆஃப் போட்டி நடைபெற உள்ளது. நவம்பர் 10 அன்று இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.

ஐபிஎல் தொடர்
2020 ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. அங்கே லீக் சுற்றுப் போட்டிகள் செப்டம்பர் 19 முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. கடைசி லீக் போட்டி நவம்பர் 3 அன்று நடைபெற உள்ளது.

பிளே-ஆஃப் சுற்று
முதல் தகுதிப் போட்டி நவம்பர் 5 அன்று துபாயில் நடைபெற உள்ளது. நவம்பர் 6 அன்று எலிமினேட்டர் போட்டி நடைபெற உள்ளது. நவம்பர் 8 அன்று இரண்டாவது தகுதிப் போட்டி நடைபெற உள்ளது. இந்த இரண்டு போட்டிகளும் அபுதாபியில் நடைபெற உள்ளது.

இறுதிப் போட்டி
இறுதிப் போட்டி நவம்பர் 10 அன்று துபாயில் நடைபெற உள்ளது. ஷார்ஜாவில் ஒரு போட்டி கூட நடைபெறப் போவதில்லை. ஐபிஎல் போட்டிகளுக்கு பதில் ஷார்ஜாவில் மகளிர் டி20 லீக் தொடர் நடைபெற உள்ளது.

மகளிர் டி20
நவம்பர் 4, 5 மற்றும் 7ஆம் தேதிகளில் மகளிர் டி20 லீக் போட்டிகள் ஷார்ஜாவில் நடைபெறும். அந்த தொடரின் இறுதிப் போட்டி நவம்பர் 9 அன்று அதே மைதானத்தில் நடைபெறும் என பிசிசிஐ அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications