Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெல்லி கேபிடல்சில் களமிறங்கிய அடுத்த சிங்கம்... பயிற்சியை துவக்கிய ரபடா

துபாய் : ஐபிஎல் போட்டிகள் துவங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஐபிஎல் அணிகளில் இந்திய வீரர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களும் இணைந்து வருகின்றனர்.

இதேபோல தென்னாப்பிரிக்க நட்சத்திர பௌலரான ரபடா, துபாயில் தன்னுடைய 6 நாட்கள் குவாரன்டைனை முடித்துக் கொண்டு நேற்று தன்னுடைய முதல் பயிற்சி போட்டிகளில் பங்கேற்றார்.

IPL 2020: Kagiso Rabada Joins His First Training Session With Delhi Capitals

டெல்லி கேபிடல்ஸ் அணியின் வீரரான ரபடா, அந்த அணிக்கு இந்த சீசனில் சிறப்பான பங்களிப்பை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்க அணியின் சிறப்பான பௌலர்களில் ஒருவரான ககிசோ ரபடா, ஐபிஎல்லில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக இந்த சீசனில் களமிறங்கி விளையாடவுள்ளார். இந்நிலையில் போட்டிகளில் பங்கேற்பதற்காக யூஏஇ வந்த அவர், கடந்த 6 நாட்களாக குவாரன்டைனில் ஈடுபட்டார். இதையடுத்து நேற்று முதல் அவர் டெல்லி கேபிடல்சில் தன்னுடைய முதல் பயிற்சியில் ஈடுபட்டார்.

துபாயின் ஐசிசி அகாடமியில் சக வீரர்களுடன் அவர் பயிற்சியில் ஈடுபட்டார். டெல்லி கேபிடல்சின் முக்கிய வீரராக பார்க்கப்படும் ரபடா, இந்த சீசனில் மிகச்சிறந்த பங்களிப்பை அந்த அணிக்கை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி கேபிடல்சின் முதல் போட்டி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் வரும் 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

Story first published: Tuesday, September 8, 2020, 17:13 [IST]
Other articles published on Sep 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+