For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முதல் பந்தே இப்படியா பண்ணுவாங்க? இது கூட தெரியலைனா எல்லாமே வேஸ்ட்.. விளாசிய கபில் தேவ்!

மும்பை : வேகப் பந்துவீச்சாளர்களுக்கு அடிப்படையே தெரியவில்லை என ஜாம்பவான் கபில் தேவ் சரமாரியாக விளாசி இருக்கிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் வேகப் பந்துவீச்சாளர்கள் ஸ்விங் பந்துவீச்சின் அருமையை புரிந்து கொண்டு இருப்பர்கள் எனவும் கூறினார்.

ஸ்விங் பந்துவீச்சு தெரியாமல் மற்ற டெக்னிக்குகளை அறிந்து இருப்பதால் எந்த பயனும் இல்லை. எல்லாமே வீணாகி விடும் எனவும் அவர் விளாசினார்.

புதிய டெக்னிக்

புதிய டெக்னிக்

நவீன கிரிக்கெட்டில் வேகப் பந்துவீச்சாளர்கள் ஸ்விங் பந்துவீச்சை தாண்டி நக்குள் பால், கிராஸ் ஸீம், ஸ்லோ பால் என பல்வேறு டெக்னிக்குகளை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், அவர்கள் யாரும் வெற்றிகரமாக செயல்படவில்லை. பெரிய புகழை அடையவில்லை.

முதல் பந்தே இப்படியா?

முதல் பந்தே இப்படியா?

இந்த நிலையில், 2020 ஐபிஎல் தொடரில் வேகப் பந்துவீச்சாளர்களின் செயல்பாட்டை பற்றி பேசிய கபில் தேவ், இன்றைய வேகப் பந்துவீச்சாளர்களை கண்டு நான் மகிழ்ச்சி அடையவில்லை. ஆட்டத்தின் முதல் பந்தை கிராஸ் ஸீமில் வீசக் கூடாது என்றார்.

ஸ்விங் தான் முக்கியம்

ஸ்விங் தான் முக்கியம்

இந்த ஐபிஎல் தொடரில் ஆடிய வீரர்கள் பந்தின் வேகத்தை விட ஸ்விங் தான் முக்கியம் என்பதை புரிந்து கொண்டு இருப்பார்கள். யாரெல்லாம் பந்தை நல்ல வேகத்துடன் ஸ்விங் செய்தார்களளோ அவர்கள் எல்லாம் சிறப்பாக செயல்பட்டார்கள் என்றார் கபில் தேவ்.

சந்தீப் சர்மா

சந்தீப் சர்மா

115 - 120 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் சந்தீப் சர்மா கூட கடினமான பந்துவீச்சாளராக இருந்தார். ஏனெனில், அவர் பந்தை ஸ்விங் செய்தார். பந்துவீச்சாளர்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். வேகமோ, கிராஸ் ஸீமோ விஷயம் இல்லை.. உங்களால் பந்தை ஸ்விங் செய்ய முடியுமா? என கேள்வி எழுப்பினார் அவர்.

அடிப்படை

அடிப்படை

உங்கள் மணிக்கட்டை நேராக வைத்துக் கொள்ளுங்கள். பந்தை ஸீமுக்கு மேலாக வைத்து பிடியுங்கள். எப்போதெல்லாம் பந்து ஸ்விங் ஆகிறதோ அப்போதெல்லாம் அந்த டெஸ்ட் போட்டி முக்கியமானதாக மாறுகிறது என ஸ்விங் பந்துவீச்சின் அடிப்படை குறித்து விளக்கினார்.

இவர்களை பாருங்கள்

இவர்களை பாருங்கள்

ஸ்விங் பந்துவீச்சு மூலம் மட்டுமே பெரிய ஜாம்பவான்கள் உருவானதை அவர் சுட்டிக் காட்டினார். வாசிம் அக்ரம், இயான் போத்தம், வில்லிஸ், ரிச்சர்ட் ஹாட்லி, கிளென் மெக்கிராத் ஆகியோர் எப்படி நல்ல பந்துவீச்சாளர்களாக இருந்தார்கள் என பாருங்கள் என்றார்.

ஸ்விங் பந்துவீச்சு

ஸ்விங் பந்துவீச்சு

ஸ்விங் பந்துவீச்சு எனும் கலை மீண்டும் வர வேண்டும். நக்குள் பால் போன்றவற்றை கற்றுக் கொள்வது சரிதான். ஆனால், பந்தை எப்படி ஸ்விங் செய்வது என்றே உங்களுக்கு தெரியவில்லை என்றால் எல்லாமே வீண் தான் என கூறினார் கபில் தேவ்.

என் ஹீரோ

என் ஹீரோ

மேலும், 2020 ஐபிஎல் தொடரில் தன் ஹீரோ நடராஜன் தான் என அவர் குறிப்பிட்டார். இளம் வீரர் நடராஜன் பயமே இல்லாமல், நிறைய யார்க்கர் பந்துகளை வீசியதை குறிப்பிட்டார். யார்க்கர் தான் இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் சிறந்த பந்துவீச்சு என்றார் கபில் தேவ்.

Story first published: Saturday, November 21, 2020, 13:24 [IST]
Other articles published on Nov 21, 2020
English summary
IPL 2020 : Kapil Dev slams fast bowlers in IPL as they failed to swing the ball.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+