Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஐபிஎல் போட்டி அட்டவணை.. தேதி, இடம், நேரம்.. முழு பட்டியல் இங்கே!

துபாய் : கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இந்த சீசனில் புதிய கேப்டன், புதிய பயிற்சியாளருடன் களமிறங்க உள்ளது.

பிசிசிஐ 2020 ஐபிஎல் அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்த சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் செப்டம்பர் 20 அன்று தன் முதல் போட்டியில் பங்கேற்க உள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மோதும் 14 லீக் போட்டிகள் அட்டவணை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

கடந்த சீசனில் அஸ்வின் கேப்டன்சியில் அந்த அணியால் பிளே-ஆஃப் செல்ல முடியவில்லை. இதை அடுத்து அணியில் பெரிய மாற்றம் செய்யப்பட்டது. அனில் கும்ப்ளே அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். கேஎல் ராகுல் கேப்டன் பதவியில் அமர்ந்தார்.

கும்ப்ளே

கும்ப்ளே

பஞ்சாப் அணி ஐபிஎல் தொடரில் இதுவரை நிலையான அணியை பெறவில்லை என்பதே அந்த அணியின் கடந்த கால தோல்விகளுக்கு காரணம். இந்த சீசனில் அனில் கும்ப்ளே தலைமையில் அந்த அணி வெற்றிப் பாதையை கண்டறியுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பஞ்சாப் போட்டிகள்

பஞ்சாப் போட்டிகள்

பஞ்சாப் அணி இந்த சீசனில் தன் முதல் போட்டியில் செப்டம்பர் 20 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக ஆட உள்ளது. நவம்பர் 1 அன்று தன் கடைசிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஆட உள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் போட்டி அட்டவணை

கிங்ஸ் லெவன் பஞ்சாப் போட்டி அட்டவணை

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பங்கேற்க உள்ள அனைத்து லீக் சுற்றுப் போட்டிகள், அவை நடக்கும் இடம், நேரம் மற்றும் தேதி ஆகியவற்றை இங்கே காணலாம்.

  • செப்டம்பர் 20: டெல்லி கேபிடல்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப், துபாய், இரவு 7:30 மணி
  • செப்டம்பர் 24: கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், துபாய், மாலை 7:30 மணி
  • செப்டம்பர் 27: ராஜஸ்தான் ராயல்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப், ஷார்ஜா, இரவு 7:30 மணி
  • அக்டோபர் 01: கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs மும்பை இந்தியன்ஸ், அபுதாபி, இரவு 7:30 மணி
  • அக்டோபர் 04: கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs சென்னை சூப்பர் கிங்ஸ், துபாய், இரவு 7:30 மணி
  • அக்டோபர் 08: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப், துபாய், இரவு 7:30 மணி
  • அக்டோபர் 10: கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், அபுதாபி, மாலை 3:30 மணி
  • அக்டோபர் 15: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஷார்ஜா, இரவு 7:30 மணி
  • அக்டோபர் 18: மும்பை இந்தியன்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப், துபாய், இரவு 7:30 மணி
  • அக்டோபர் 20: கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs டெல்லி கேபிடல்ஸ், அபுதாபி, இரவு 7:30 மணி
  • அக்டோபர் 24: கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், துபாய், இரவு 7:30 மணி
  • அக்டோபர் 26: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப், ஷார்ஜா, இரவு 7:30 மணி
  • அக்டோபர் 30: கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs ராஜஸ்தான் ராயல்ஸ், அபுதாபி, இரவு 7:30 மணி
  • நவம்பர் 01: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப், அபுதாபி, மாலை 3:30 மணி
Story first published: Sunday, September 6, 2020, 22:19 [IST]
Other articles published on Sep 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+