For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

KXIP vs RCB : 97 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் இமாலய வெற்றி.. மண்ணைக் கவ்விய பெங்களூர்!

துபாய் : 2020 ஐபிஎல் தொடரின் ஆறாவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 97 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.

பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து 206 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் கேஎல் ராகுல் அதிரடியாக ஆடி, சதம் கடந்து 132 ரன்கள் குவித்தார். அடுத்து ஆடிய பெங்களூர் அணி பெரிய இலக்கை கண்டு பதற்றத்தில் 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

என்னங்க இதெல்லாம்.. நம்பவே முடியலை.. தப்பு மேல் தப்பு செய்யும் தோனி.. துல்லியமாக கண்டுபிடித்த கோலி!என்னங்க இதெல்லாம்.. நம்பவே முடியலை.. தப்பு மேல் தப்பு செய்யும் தோனி.. துல்லியமாக கண்டுபிடித்த கோலி!

ஐபிஎல் லீக் போட்டி

ஐபிஎல் லீக் போட்டி

2020 ஐபிஎல் தொடரின் ஆறாவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணிக்கு கேஎல் ராகுல் - மயங்க் அகர்வால் துவக்கம் அளித்தனர்.

பஞ்சாப் பேட்டிங்

பஞ்சாப் பேட்டிங்

பஞ்சாப் அணி பேட்டிங்கில் கலக்கியது. மயங்க் அகர்வால் 26, நிக்கோலஸ் பூரன் 17, மேக்ஸ்வெல் 5 ரன்களில் ஆட்டமிழந்தாலும், துவக்க வீரராக களமிறங்கி கேப்டன் கேஎல் ராகுல் கடைசி வரை நின்று ரன் குவித்தார்.

ராகுல் சதம்

ராகுல் சதம்

ராகுல் துவக்கம் முதல் ஃபோர் அடித்து வந்தார். சிக்ஸ் அடித்து ரிஸ்க் எடுக்கவில்லை. ரன் ரேட் எட்டுக்கும் மேல் இருக்கும் படி பார்த்துக் கொண்டார். சதம் கடந்த அவர் கடைசி இரண்டு ஓவர்களில் சிக்ஸ், ஃபோர் என தெறிக்க விட்டார்.

பஞ்சாப் ஸ்கோர்

பஞ்சாப் ஸ்கோர்

19வது ஓவரில் 26 ரன்களும், 20வது ஓவரில் 23 ரன்களும் எடுத்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. ராகுல் 132 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கருண் நாயர் 15 ரன்கள் எடுத்து இருந்தார்.

பெங்களூர் சொதப்பல்

பெங்களூர் சொதப்பல்

பெங்களூர் அணியின் பந்துவீச்சு மோசமாக அமைந்தது. உமேஷ் யாதவ் 3 ஓவர்களில் 35 ரன்கள், டேல் ஸ்டெய்ன் 4 ஓவர்களில் 57 ரன்கள், சிவம் துபே 3 ஓவர்களில் 33 ரன்கள் கொடுத்து அதிர்ச்சி அளித்தனர். சாஹல் 1, துபே 2 விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.

இமாலய இலக்கு

இமாலய இலக்கு

பெங்களூர் அணிக்கு 207 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணிக்கு தேவ்தத் படிக்கல், ஆரோன் பின்ச் துவக்கம் அளித்தனர். படிக்கல் 1, ஜோஸ் பிலிப் 0, கோலி 1 ரன்னில் வரிசையாக ஆட்டமிழந்தனர். 2.4 ஓவரில் பெங்களூர் அணி 4 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது.

தோல்வி முற்றிலும் உறுதி

தோல்வி முற்றிலும் உறுதி

அப்போதே பெங்களூர் அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதி ஆனது. பின்ச் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். டி வில்லியர்ஸ் அதிரடி ஆட்டம் ஆடினாலும் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். அத்துடன் பெங்களூர் தோல்வி முற்றிலும் உறுதி ஆனது.

வாஷிங்க்டன் சுந்தர்

வாஷிங்க்டன் சுந்தர்

வாஷிங்க்டன் சுந்தர் அணியின் மானத்தை காப்பாற்றி 100 ரன்களை கடக்க வைத்தார். சுந்தர் 30 ரன்கள் எடுத்தார். பெங்களூர் அணி 17 ஓவர்களில் 109 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து படுதோல்வி அடைந்தது.

இமாலய வெற்றி

இமாலய வெற்றி

பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி பேட்டிங்கில் மட்டுமில்லாமல் பந்துவீச்சிலும் கலக்கியது. பெங்களூர் அணி பேட்ஸ்மேன்கள் பெரிய இலக்கு என்ற பதற்றத்தில் இருந்த போது அதை சரியாக பயன்படுத்தி விக்கெட்களை அள்ளினர்.

பந்துவீச்சு

பந்துவீச்சு

காட்ரல் 2, சமி 1, ரவி பிஸ்னோய் 3, முருகன் அஸ்வின் 3, மேக்ஸ்வெல் 1 விக்கெட் வீழ்த்தினர். பஞ்சாப் அணி தன் முதல் போட்டியில் வெற்றிக்கு மிக அருகே வந்து போட்டியை டை செய்து, சூப்பர் ஓவரில் தோல்வி அடைந்த நிலையில், இந்த வெற்றி அந்த அணிக்கு பெரும் நம்பிக்கை அளிப்பதாக அமைந்தது.

Story first published: Thursday, September 24, 2020, 23:26 [IST]
Other articles published on Sep 24, 2020
English summary
IPL 2020 : Kings XI Punjab vs Royal challengers Bangalore match result
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X