Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு மேட்ச் ஆடுவதற்குள் இப்படியா? ஐபிஎல்-இல் ஆட வந்த முதல் அமெரிக்க வீரருக்கு நேர்ந்த கதி!

அபுதாபி : ஐபிஎல் டி20 தொடரில் இடம் பெற்ற முதல் அமெரிக்க வீரர் அலி கான். அவர் இன்னும் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை.

அதற்குள் அவர் 2020 ஐபிஎல் தொடரில் இருந்தே விலக உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

அவரை தேர்வு செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சரியான மாற்று வீரர் கிடைக்காமல் மீண்டும் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2020 ஐபிஎல் தொடருக்கு முழு பலத்துடன் தயாரானது. தொடருக்கு முன் வேகப் பந்துவீச்சாளர் ஹாரி கர்னி காயம் அடைந்தார். அவரால் தொடரில் ஆட முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவர் 2020 ஐபிஎல் தொடரில் இருந்தே விலகினார்.

மாற்று வீரர்

மாற்று வீரர்

அவருக்கு பதிலாக மாற்று வீரரை தேடி வந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். சரியான வெளிநாட்டு வேகப் பந்துவீச்சாளர் கிடைக்கவில்லை. அதே சமயத்தில் மும்பை உள்ளிட்ட சில அணிகள் மாற்று வேகப் பந்துவீச்சாளர்களை நியமித்தது.

கரீபியன் பிரீமியர் லீக்

கரீபியன் பிரீமியர் லீக்

இந்த நிலையில், கொல்கத்தா அணியின் உரிமையாளர்கள் கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் என்ற அணியை நடத்தி வருகின்றனர். அந்த அணியில் ஆடி வந்த அலி கான் என்ற அமெரிக்க வீரரை தேர்வு செய்ய முடிவு செய்தது.

முதல் அமெரிக்க வீரர்

முதல் அமெரிக்க வீரர்

ஐபிஎல் தொடரில் இதுவரை அமெரிக்க கிரிக்கெட் வீரர் யாரும் ஆடி இராத நிலையில் அலி கான் தான் ஐபிஎல் தொடரில் பங்கேற்ற முதல் அமெரிக்க கிரிக்கெட் வீரர் ஆவார். அவர் ஐபிஎல் கனவுகளுடன் கொல்கத்தா அணியில் இணைந்து பயிற்சி செய்து வந்தார்.

காயம்

காயம்

இந்த நிலையில், அவருக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது. அதனால், அவருக்கு போட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து காயத்துடன் இருந்த அவர் பயிற்சிகளில் மட்டுமே ஈடுபட்டு வந்தார். அவர் காயம் குணமடையவில்லை.

ஐபிஎல்-இல் இருந்து விலகல்

ஐபிஎல்-இல் இருந்து விலகல்

தற்போது அலி கான் 2020 ஐபிஎல் தொடரில் இருந்தே விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மாற்று வீரரை விரைவில் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாகவே அவர் விலகி உள்ளதாகவும் தெரிகிறது.

ஒரு போட்டியில் கூட ஆடவில்லை

ஒரு போட்டியில் கூட ஆடவில்லை

அலி கான் இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடாத நிலையில் ஐபிஎல் தொடரில் இருந்தே விலகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், ஐபிஎல் தொடரில் ஆடிய முதல் அமெரிக்க வீரர் என்ற பெயரை பெறும் வாய்ப்பை இழந்துள்ளார் அலி கான்.

கொல்கத்தா அணிக்கு சிக்கல்

கொல்கத்தா அணிக்கு சிக்கல்

கொல்கத்தா அணிக்கு எளிதாக சிறந்த மாற்று வீரர் கிடைப்பாரா? என்பதும் கேள்விக் குறியாக உள்ளது. கொல்கத்தா அணி இதுவரை நான்கு போட்டிகளில் ஆடி இரண்டு வெற்றிகள் மட்டுமே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, October 7, 2020, 21:13 [IST]
Other articles published on Oct 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+