Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரொம்ப நன்றி!! சிஎஸ்கேவை பிளே-ஆஃப் அனுப்ப கேப்டன் கோலி பகீரத முயற்சி.. தோனி செம ஹேப்பி!

அபுதாபி : 2020 ஐபிஎல் தொடரின் துவக்கம் கடந்த இரண்டு சீசன்களின் நிலைமைக்கு முற்றிலும் மாறாக இருக்கிறது.

சிஎஸ்கே அணி தோல்விகளால் துவண்டு இப்போது தான் லேசாக மீண்டுள்ளது. அந்த அணி பிளே-ஆஃப் செல்ல கடும் முயற்சி எடுக்க வேண்டும். இனி வரும் தோல்விகள் அந்த அணியை பாதிக்கும்.

இந்த நிலையில், சிஎஸ்கே அணிக்கு தாமாக வந்து உதவி செய்து வருகிறார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி.

சிஎஸ்கே அணி நிலை

சிஎஸ்கே அணி நிலை

2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி முதல் ஐந்து போட்டிகளில் இரண்டு வெற்றிகள் மட்டுமே பெற்றுள்ளது. அந்த அணி மூன்று போட்டிகளில் தொடர்ந்து பின் அதில் இருந்து மீண்டு 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

பிளே-ஆஃப் வாய்ப்பு

பிளே-ஆஃப் வாய்ப்பு

ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றால் புள்ளிப் பட்டியலில் 16 புள்ளிகள் பெற்றால் போதும். அந்த வகையில் சிஎஸ்கே அணிக்கு இன்னும் ஒன்பது போட்டிகளில் ஆறு வெற்றிகள் தேவை. சிஎஸ்கே சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இது சாத்தியம் தான்.

பெங்களூர் அணி நிலை

பெங்களூர் அணி நிலை

ஆனால், இந்த முறை அனைத்து அணிகளும் வெற்றி, தோல்விகளை மாற்றி, மாற்றி குவித்து வருகின்றன. எந்த அணியையும் குறைத்து மதிப்பிட முடியவில்லை. கடந்த சீசன்களில் தோல்வி அடைந்து வந்த பெங்களூர் அணி இந்த முறை ஐந்து போட்டிகளில் மூன்றில் வென்று புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

சிஎஸ்கே வெற்றிகள்

சிஎஸ்கே வெற்றிகள்

இந்த நிலையில், தற்போது ஐந்தாம் இடத்தில் இருக்கும் சிஎஸ்கே அணி பிளே-ஆஃப் செல்ல வேண்டும் என்றால் புள்ளிப் பட்டியலில் தனக்கு மேலே முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெற்றிகளை பெற வேண்டும்.

நெட் ரன் ரேட்

நெட் ரன் ரேட்

அது சாத்தியமில்லை. ஒன்பது போட்டிகளில் ஆறு வெற்றிகள் பெற முடியவில்லை என்றால், பல அணிகள் 14 அல்லது 12 புள்ளிகள் பெற்றால் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடத்தை பிடிக்க கடும் போட்டி நிலவும். அப்போது நெட் ரன் ரேட் அடிப்படையில் தான் அணிகள் பிளே-ஆஃப்பிற்கு தேர்வு செய்யப்படும்.

கடைசி இடத்தில் பெங்களூர் அணி

கடைசி இடத்தில் பெங்களூர் அணி

இந்த விஷயத்தில் தான் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி, சிஎஸ்கே அணிக்கு உதவி செய்து வருகிறார். ஆம், இரண்டு தோல்விகள் மட்டுமே பெற்றுள்ள பெங்களூர் அணியின் நெட் ரன் ரேட் (-1.355) பாதாளத்தில் உள்ளது. புள்ளிப் பட்டியலில் நெட் ரன் ரேட்டில் அந்த அணி கடைசி இடத்தில் உள்ளது.

கோலி செய்யும் தவறு

கோலி செய்யும் தவறு

விராட் கோலி பெங்களூர் அணி சேஸிங்கில் தோற்கும் நிலை வரும் போது தன் அணி கடைசி வரை வெற்றிக்கு போராட வேண்டும் என நினைக்கிறார். எட்ட முடியாத இலக்காக இருந்தாலும் சிக்ஸ் அடிக்க முயற்சி செய்து வெற்றிக்கு போராட வேண்டும் என்கிறார்.

பெரிய வித்தியாசம்

பெரிய வித்தியாசம்

ஆனால், அதனால் விக்கெட்கள் பறிபோகிறது. பெரிய வித்தியாசத்தில் பெங்களூர் அணி தோல்வி அடைகிறது. அந்த அணி அடைந்த இரண்டு முறை ஏற்பட்ட தோல்விகளில் 97 ரன்கள் மற்றும் 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இருந்தது. கோலியின் அணுகுமுறையால் தான் இந்த மோசமான தோல்விகள் கிடைத்தது. இதுவே நெட் ரன் ரேட் சரிவுக்கு காரணம்.

தோனி உஷார்

தோனி உஷார்

சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி எப்போதுமே நெட் ரன் ரேட் விஷயத்தில் உஷாராக இருப்பார். சேஸிங் செய்யும் போது தோல்வி உறுதி என்றால் கடைசி வரை களத்தில் பேட்ஸ்மேன் நின்று ரன் குவிக்கும் படி திட்டமிடுவார். அது விமர்சனத்துக்கு உள்ளானாலும், பிளே-ஆஃப் செல்ல அது உதவும் என அவர் நம்புகிறார்.

கடைசி நேரத்தில் சிஎஸ்கே முந்தும்

கடைசி நேரத்தில் சிஎஸ்கே முந்தும்

பெங்களூர் அணி இன்னும் சில போட்டிகளில் இதே போல பெரிய வித்தியாசத்தில் தோற்றால் அது கடைசி நேரத்தில் அந்த அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பை பாதிக்கலாம். சிஎஸ்கே அணி அதிக வெற்றிகள் பெறாமல் போனாலும், நெட் ரன் ரேட் வைத்து முன்னேறக் கூடும்.

Story first published: Wednesday, October 7, 2020, 21:13 [IST]
Other articles published on Oct 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+