தோனி எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. தினேஷ் கார்த்திக் மாஸ்டர்ஸ்ட்ரோக்.. சிஎஸ்கே வீழ்ந்தது இப்படித்தான்!
அபுதாபி : சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு கேப்டன் தினேஷ் கார்த்திக் தான் முக்கிய காரணம்.
தினேஷ் கார்த்திக் கேப்டன்சி மீது கடும் விமர்சனம் எழுந்து வரும் அதே வேளையில் அவர் கேப்டன்சியில் சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறார்.
சிஎஸ்கே அணியை வீழ்த்த ரிஸ்க் எடுத்து சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல் ஓவர்களை கடைசி நேரத்தில் பயன்படுத்தி வெற்றி தேடித் தந்தார் கேப்டன் தினேஷ் கார்த்திக்.

கொல்கத்தா ஸ்கோர்
இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. 190 ரன்களை கடக்கும் என பவர்பிளே முடிவில் எதிர்ப்பார்ப்பை கிளப்பிய கொல்கத்தா, 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சிஎஸ்கே அசத்தல் துவக்கம்
சிஎஸ்கே அணிக்கு பஞ்சாப் போட்டி போல அதிரடி துவக்கம் அளித்த வாட்சன் - பாப் டுபிளெசிஸ் முதல் விக்கெட்டுக்கு 30 ரன்கள் மட்டுமே சேர்த்தது. எனினும், ராயுடு, ஷேன் வாட்சன் ரன் குவித்து வந்தனர். ஓவருக்கு 9 ரன்கள் என்ற அளவில் ரன் எடுத்து வந்தனர்.

தினேஷ் கார்த்திக் மீது விமர்சனம்
சுனில் நரைன் பந்துவீச்சுக்கு எதிராக ஷேன் வாட்சன் மற்றும் அம்பதி ராயுடு ரன் எடுக்க திணறி விக்கெட்டை பறிகொடுத்ததாக புள்ளி விவரம் கூறும் நிலையில், அவரை 11 ஓவர்கள் வரை பயன்படுத்தவில்லை தினேஷ் கார்த்திக். அதனால், அவரை ரசிகர்கள் திட்டி வந்தனர்.

நரைன், ரஸ்ஸல் திட்டம்
வேகப் பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ்-இன் நான்காவது ஓவரை 11வது ஓவரில் வீச வைத்து அவரது கோட்டாவை முடித்தார் தினேஷ். இந்த நிலையில், இறுதி ஓவர்களை யார் வீசப் போவது? என்ற கேள்வி எழுந்தது. 12வது ஓவரில் நரைனை பந்து வீச அழைத்தார். ரஸ்ஸலுக்கு அப்போதும் ஓவர் அளிக்கவில்லை.

சரிந்த சிஎஸ்கே
நரைன் வந்தது முதல் சிஎஸ்கே அணியின் சரிவு துவங்கியது. அவரது பந்து வீச்சிலும், தொடர்ந்து கம்லேஷ் நாகர்கோட்டி, வருண் சக்கரவர்த்தி ஓவர்களில் ரன்கள் எடுக்க முடியாமல் விக்கெட்களை இழந்தது சிஎஸ்கே. வாட்சன் 50, ராயுடு 30, தோனி 11 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

கடைசி ஓவர்கள்
18வது ஓவரில் தான் ஆண்ட்ரே ரஸ்ஸல் ஓவர் பெற்றார். ஆனால், அது தான் தினேஷ் கார்த்திக்கின் அசத்தல் திட்டம். நரைன் ரன்களை கட்டுப்படுத்தி விக்கெட்களை வீழ்த்த, ரஸ்ஸலும் அதே வேலையை கடைசி ஓவர்களில் செய்தார்.

ரிஸ்க்கான திட்டம்
சிஎஸ்கே அணியின் ஜாதவ் கடைசி 3 ஓவர்களில் 39 ரன்கள் தேவை என்ற நிலையில், டாட் பால் ஆடி சொதப்பினார். சிஎஸ்கே 157 ரன்கள் மட்டுமே எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தினேஷ் கார்த்திக் சுனில் நரைன், ரஸ்ஸல் ஓவர்களை கடைசி 9 ஓவர்களில் மட்டுமே பயன்படுத்து ரிஸ்க் எடுத்து சிஎஸ்கே அணியை வீழ்த்தினார்.

தோனி எதிர்பார்க்காத திருப்பம்
கடைசி ஓவர்கள் முழுவதும் இப்படி ரன் எடுக்க முடியாத படி தினேஷ் கார்த்திக் ஓவர் கொடுப்பார் என தோனி எதிர்பார்க்கவில்லை. எனினும், தோனி பேட்டிங் செய்யும் போது கடந்த போட்டிகளைப் போல இல்லாமல் அடித்து ஆட முயற்சி செய்தார். எனினும், அது பலன் அளிக்கவில்லை.


Click it and Unblock the Notifications