Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படி ஒரு பேட்ஸ்மேன் தேவையே இல்லை.. டீமை விட்டு தூக்கி எறிங்க.. கொந்தளித்த சிஎஸ்கே ரசிகர்கள்

அபுதாபி : மூன்று ஓவர்களில் 39 ரன்கள் எடுக்க வேண்டும் என்பது டி20 போட்டிகளில் எட்டக் கூடிய இலக்குதான்.

மூன்று அல்லது நான்கு சிக்ஸ், ஃபோர் அடித்து மற்ற பந்துகளில் ஒற்றை ரன்களை ஓடினாலே எடுத்து விடலாம்.

இந்த இலக்கை எட்ட போராடினால் நிச்சயம் பந்து வீசும் அணிக்கு அழுத்தம் ஏற்பட்டு தவறுகள் செய்யக் கூடும். ஆனால், இது எதுவுமே செய்யாமல் டெஸ்ட் போட்டி போல அந்த கடைசி மூன்று ஓவர்களில் டாட் பால் ஆடி வெறுப்பேற்றினார் கேதர் ஜாதவ்.

கொல்கத்தா போட்டி

கொல்கத்தா போட்டி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து பஞ்சாப் போட்டியில் பெரிய வெற்றி பெற்று, கொல்கத்தா அணியை சந்தித்தது. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து 167 ரன்கள் குவித்தது.

வெற்றி இலக்கு

வெற்றி இலக்கு

சிஎஸ்கே அணிக்கு 168 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் சிஎஸ்கே அணியை நல்ல நிலைக்கு கொண்டு சென்றனர். ஓவருக்கு 8.5 ரன்களுக்கும் மேல் குவித்து வந்தது சிஎஸ்கே.

ஜாதவ் பேட்டிங் ஆர்டர்

ஜாதவ் பேட்டிங் ஆர்டர்

அதன் பின் விக்கெட் சரிவு ஏற்பட்டது. அப்போது தோனி, சாம் கர்ரன் வந்த பின் தான் கேதர் ஜாதவ் பேட்டிங் செய்ய வந்தார். அவர் சரியாக ரன் எடுக்க மாட்டார், பந்தை வீணடிப்பார் என தெரிந்தே அவருக்கு பேட்டிங் வாய்ப்பு அளிக்காமல் தள்ளிப் போட்டார் தோனி.

சொதப்பல்

சொதப்பல்

17வது ஓவரில் தோனி வீழ்ந்த பின் வந்தார் ஜாதவ். கடைசி மூன்று ஓவர்களில் 39 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் நிறைய டாட் பால் ஆடினார். சிங்கிள் ரன் எடுக்கவும் முயற்சி செய்யவில்லை. அதனால் அழுத்தம் அதிகரித்து வந்தது.

கடைசி ஓவர்

கடைசி ஓவர்

கடைசி ஓவரில் 26 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஜாதவ் முதல் மூன்று பந்துகளில் வெறும் 1 ரன் எடுத்தார். அடுத்த மூன்று பந்துகளில் ஜடேஜா 1 சிக்ஸ், 2 ஃபோர் அடித்தார். தோல்வி தான் எனத் தெரிந்தும் ஜடேஜா அதிரடி ஆட்டம் ஆடினார்.

ரசிகர்கள் கோபம்

ரசிகர்கள் கோபம்

ஜாதவ் மோசமான ஆட்டத்தால் தான் இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது என சிஎஸ்கே ரசிகர்கள் கோபம் அடைந்தனர். சமூக வலைதளங்களில் ஜாதவ் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.

ஜாதவ் பார்ம்

ஜாதவ் பார்ம்

கேதர் ஜாதவ் கடந்த ஓராண்டாகவே சிறந்த பார்மில் இல்லை. 2019 உலகக்கோப்பை தொடரில் கூட அவர் பந்துகளை வீணடித்து விமர்சனத்துக்கு ஆளானார். 2020 ஐபிஎல் தொடரிலும் அவரது பார்ம் மோசமாகவே உள்ளது. அவர் பார்ம் அவுட் என்பதே உண்மை.

தோனி நீக்க வேண்டும்

தோனி நீக்க வேண்டும்

இனியும் ஜாதவ் சிஎஸ்கே அணியில் இருந்தால் அது அணிக்கு தான் பாதிப்பு எனக் கூறும் ரசிகர்கள், அவரை நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ருதுராஜ் கெயிக்வாட் அல்லது ஜெகதீசன் போன்ற இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு அளிக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.

Story first published: Thursday, October 8, 2020, 12:21 [IST]
Other articles published on Oct 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+