For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சேஸிங்கை சொதப்பிய ஜாதவ்.. சிஎஸ்கேவை திட்டம் போட்டு காலி செய்த தினேஷ் கார்த்திக்.. கொல்கத்தா வெற்றி!

அபுதாபி : 2020 ஐபிஎல் தொடரின் 21வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக பந்துவீசி கொல்கத்தா அணியை ஆல் - அவுட் செய்தது. அடுத்து சிஎஸ்கே அணியை திட்டமிட்டு வீழ்த்தினார் தினேஷ் கார்த்திக்.

கொல்கத்தா அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. பிராவோ 3, சாம் கர்ரன் 2, ஷர்துல் தாக்குர் 2, கரன் சர்மா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

சிஎஸ்கே - கொல்கத்தா போட்டி

சிஎஸ்கே - கொல்கத்தா போட்டி

2020 ஐபிஎல் தொடரின் 21வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

சிஎஸ்கே அணியில் மாற்றம்?

சிஎஸ்கே அணியில் மாற்றம்?

சிஎஸ்கே அணியில் ஒரே ஒரு மிகப் பெரிய மாற்றம் செய்யப்பட்டது. முக்கிய சுழற் பந்துவீச்சாளர் பியுஷ் சாவ்லா நீக்கப்பட்டார். அவருக்கு பதில் கரன் சர்மா அணியில் சேர்க்கப்பட்டார். பியுஷ் சாவ்லா கடந்த போட்டிகளில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா பேட்டிங்

கொல்கத்தா பேட்டிங்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு துவக்க வீரர்களாக ராகுல் திரிபாதி - ஷுப்மன் கில் களமிறங்கினர். கில் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஷர்துல் தாக்குர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நிதிஷ் ராணா 9 ரன்களில் கரன் சர்மாவிடம் வீழ்ந்தார்.

முக்கிய விக்கெட்கள் காலி

முக்கிய விக்கெட்கள் காலி

அடுத்து சுனில் நரைன் திடீரென நான்காம் வரிசையில் இறங்கி 9 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். அவரை ஜடேஜா - பாப் டுபிளெசிஸ் இணைந்து அசத்தல் கேட்ச் பிடித்து வெளியேற்றினர். அடுத்து ஆபத்தான இயான் மார்கன் 7 ரன்கள் எடுத்து சாம் கர்ரனிடமும், ஆண்ட்ரே ரஸ்ஸல் 2 ரன்கள் எடுத்து ஷர்துல் தாக்குரிடமும் வீழ்ந்தனர்.

சரிவு

சரிவு

ராகுல் திரிபாதி மட்டுமே தனி ஆளாக 17வது ஓவர் வரை போராடினார். அவர் 81 ரன்கள் எடுத்து பிராவோவிடம் வீழ்ந்தார். அடுத்து தினேஷ் கார்த்திக் 12 ரன்கள் எடுத்து கர்ரன் ஓவரில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் நாகர்கோட்டி, சிவம் மாவி பிராவோ பந்துவீச்சில் டக் அவுட் ஆனார்கள்.

சரிவு

சரிவு

கொல்கத்தா அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஒரு கட்டத்தில் 190 ரன்களுக்கும் மேல் எடுப்பது போல ஆடி வந்த கொல்கத்தா சிஎஸ்கே அணியின் பந்துவீச்சில் சரிந்தது. பிராவோ 3, சாம் கர்ரன் 2, ஷர்துல் தாக்குர் 2, கரன் சர்மா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

சிஎஸ்கே சேஸிங்

சிஎஸ்கே சேஸிங்

சிஎஸ்கே அணிக்கு 168 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. துவக்க வீரர்கள் ஷேன் வாட்சன் - பாப் டுபிளெசிஸ் அதிரடி ஆட்டம் ஆடினர். டுபிளெசிஸ் 10 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ராயுடு - வாட்சன் இணைந்து 69 ரன்கள் குவித்தனர்.

விக்கெட் சரிவு

விக்கெட் சரிவு

சிஎஸ்கே அணிக்கு 168 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சிஎஸ்கே அணி பேட்டிங்கில் என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஷேன் வாட்சன் - பாப் டுபிளெசிஸ் அந்த அணிக்கு துவக்கம் அளித்தனர்.

ஜாதவ் சொதப்பல்

ஜாதவ் சொதப்பல்

கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் மூன்று பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து வெறுப்பேற்றினார். ஜடேஜா கடைசி 3 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தும் பயனில்லாமல் போனது. சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 157 ரன்கள் மட்டுமே எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

தினேஷ் கார்த்திக் திட்டம்

தினேஷ் கார்த்திக் திட்டம்

கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் மிக சிறப்பாக திட்டமிட்டு, சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல் ஓவர்களை கடைசி ஓவர்களில் மாற்றி., மாற்றி பயன்படுத்தி சிஎஸ்கே அணியை ரன் எடுக்க விடாமல் செய்து தோல்வி அடைய வைத்தார்.

Story first published: Wednesday, October 7, 2020, 23:49 [IST]
Other articles published on Oct 7, 2020
English summary
IPL News in Tamil : KKR vs CSK - Kolkata Knight Riders vs Chennai Super Kings 21st match result
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+