Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவரை டீம்ல எடுத்ததே தப்பு.. முதல் பந்திலேயே அவுட்.. சீனியர் வீரரை நம்பி மோசம் போன பாண்டிங்!

அபுதாபி : டெல்லி கேபிடல்ஸ் அணி 2020 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

பிளே-ஆஃப் செல்லும் அணிகளில் முதன்மையான அணியாகவும் உள்ளது. ஆனால், அந்த அணியிலும் பல பிரச்சனைகள் நிலவுகின்றன.

அதில் ஒருவர் தான் அஜின்க்யா ரஹானே. அணியில் கூடுதல் பேட்ஸ்மேன் ஆக மட்டுமே ரஹானே இடம் பெற்றுள்ளார். இந்திய பேட்ஸ்மேன்களுக்கு மாற்று வீரராக அவர் செயல்பட்டு வருகிறார். அதிலும் அவரது சொதப்பல்கள் அணியை பாதித்து வருகிறது.

கொல்கத்தா - டெல்லி போட்டி

கொல்கத்தா - டெல்லி போட்டி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே ஆன 42வது லீக் போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி தோல்வி அடைந்தால் பிளே-ஆஃப் வாய்ப்புக்கு மற்ற அணிகளுடன் போட்டி போட வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என்ற நிலை. அதே போல, டெல்லி வென்றால் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் முதல் அணியாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.

ப்ரித்வி ஷா நீக்கம்

ப்ரித்வி ஷா நீக்கம்

டெல்லி அணியில் கடந்த போட்டிகளில் தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வந்த இளம் வீரர் பிரித்வி ஷா அணியில் இருந்து நீக்கப்பட்டார். முதல் சில போட்டிகளில் அவர் சிறப்பாக ஆடினாலும், தொடர்ந்து தவறான பேட்டிங் டெக்னிக்கை பயன்படுத்தி ஆட்டமிழந்து வந்தார்.

துவக்க வீரரான ரஹானே

துவக்க வீரரான ரஹானே

ப்ரித்வி ஷா நீக்கப்பட்ட நிலையில், அஜின்க்யா ரஹானே துவக்க வீரராக அணியில் சேர்க்கப்பட்டார். முன்னதாக அவர் ரிஷப் பண்ட் காயத்தில் சிக்கிய போது அவருக்கு மாற்று வீரராக செயல்பட்டார். அப்போதும் அவர் 15, 2, 8 என சொற்ப ரன்களில் பந்துகளை வீணடித்து ஏமாற்றம் அளித்து இருந்தார். அவரை நம்பி மீண்டும் வாய்ப்பு அளித்தார் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்.

கொல்கத்தா ஸ்கோர்

கொல்கத்தா ஸ்கோர்

இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து 194 ரன்கள் குவித்தது. சுனில் நரைன் 32 பந்துகளில் 64 ரன்கள் குவித்து போட்டியை தலைகீழாக மாற்றினார். அதனால், டெல்லி அணி இமாலய இலக்கை சேஸிங் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

டெல்லிக்கு அதிர்ச்சி

டெல்லிக்கு அதிர்ச்சி

பெரிய இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி அளித்தார் ரஹானே. பாட் கம்மின்ஸ் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் மிக மோசமான முறையில் எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்தார். ரஹானே. ரிவ்யூ கூட கேட்கவில்லை. அது பற்றி சிந்திக்கக் கூட இல்லை ரஹானே. அந்த அளவுக்கு மோசமாக ஆட்டமிழந்தார்.

ரசிகர்கள் கோபம்

ரசிகர்கள் கோபம்

ரஹானே பார்மிலேயே இல்லை என்பது தெரிந்தும் அவரை ஏன் துவக்க வீரராக ஆட வைக்க வேண்டும் என ரசிகர்கள் கோபம் அடைந்தனர். ப்ரித்வி ஷாவை நீக்கியது சரிதான். ஆனால், ரஹானேவுக்கு பதில் வேறு இளம் வீரருக்கு அணியில் வாய்ப்பு அளித்திருக்கலாம் என ரசிகர்கள் பாண்டிங் முடிவை விமர்சனம் செய்தனர்.

பாண்டிங் முடிவு தவறு

பாண்டிங் முடிவு தவறு

ரிக்கி பாண்டிங் எப்போதும் அனுபவ வீரர்களுக்கு அணியில் ஒரு இடம் அளித்து வருகிறார். இளம் வீரர்களையும் அவர் ஆதரித்து வருகிறார். ஆனால், ரஹானே மூன்று போட்டிகளில் சொதப்பிய பின்னும் அவரை நம்பியது தான் ரிக்கி பாண்டிங் செய்த தவறு.

டெல்லி சரிவு

டெல்லி சரிவு

இந்தப் போட்டியில் ரஹானே முதல் பந்தில் டக் அவுட் ஆன நிலையில், அடுத்தடுத்து டெல்லி அணி வீரர்கள் விக்கெட்டை இழந்தனர். வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்களை வீழ்த்தி டெல்லி அணியை நிலைகுலைய வைத்தார்.

Story first published: Saturday, October 24, 2020, 19:31 [IST]
Other articles published on Oct 24, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+