Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுதான் கடைசி சான்ஸ்.. கலக்கத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. அணிக்கு திரும்பிய நட்சத்திர வீரர்!

அபுதாபி : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே ஆன லீக் போட்டி அபுதாபியில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோற்றால் அது பஞ்சாப், ஹைதராபாத் அணிகளுக்கு சாதகமாக மாறும்.

எளிதாக பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பு சிக்கலாகி விடும். இந்த நிலையில், கொல்கத்தா அணியில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டது.

டெல்லி டாஸ் வெற்றி

டெல்லி டாஸ் வெற்றி

2020 ஐபிஎல் தொடரின் 42வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய நேர்ந்தது.

கொல்கத்தா கலக்கம்

கொல்கத்தா கலக்கம்

கடந்த முறை அந்த அணி முதலில் பேட்டிங் செய்த போது 84 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்-அவுட் ஆகி பரிதாப நிலையை அடைந்தது. இந்த நிலையில், மீண்டும் முதலில் பேட்டிங் ஆட வேண்டிய நிலை ஏற்பட்டதால் அந்த அணி கலக்கத்தில் இருந்தது.

இரு வீரர்கள் நீக்கம்

இரு வீரர்கள் நீக்கம்

மேலும், அணியில் இரு வீரர்கள் நீக்கப்பட்டனர். டாம் பான்டன், குல்தீப் யாதவ நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதில் நட்சத்திர சுனில் நரைன், கம்லேஷ் நாகர்கோட்டி அணியில் சேர்க்கப்பட்டனர். சுனில் நரைன் அணிக்கு திரும்பியது எந்த வகையில் கொல்கத்தா அணிக்கு பலன் அளிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. கேப்டன் இயான் மார்கனின் இந்த மாற்றம் அணியில் தாக்கத்தை ஏற்படுத்தாது என விமர்சகர்கள் கூறினர்.

ப்ரித்வி ஷா நீக்கம்

ப்ரித்வி ஷா நீக்கம்

டெல்லி அணியில் மோசமான பார்மில் இருக்கும் ப்ரித்வி ஷா அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு பதில் அஜின்க்யா ரஹானே துவக்க வீரராக மாற்றப்பட்டார். டேனியல் சாம்ஸ் நீக்கப்பட்டு அன்ரிச் நோர்ஜே அணியில் சேர்க்கப்பட்டார்.

Story first published: Saturday, October 24, 2020, 16:16 [IST]
Other articles published on Oct 24, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+