Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நரைன் வெறியாட்டம்.. 5 விக்கெட் அள்ளிய தமிழக வீரர்.. டெல்லியை துவம்சம் செய்த கொல்கத்தா!

அபுதாபி : 2020 ஐபிஎல் தொடரின் 42வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து 194 ரன்கள் குவித்தது. சுனில் நரைன் 32 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார்.

அடுத்து ஆடிய டெல்லி அணியின் 5 விக்கெட்களை அள்ளினார் வருண் சக்கரவர்த்தி. டெல்லி 59 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.

கொல்கத்தா பேட்டிங்

கொல்கத்தா பேட்டிங்

இந்தப் போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா அணிக்கு ஷுப்மன் கில் 9 ரன்களில் ஆட்டமிழந்து மோசமான துவக்கம் அளித்தார். நிதிஷ் ராணா இந்தப் போட்டியில் துவக்க வீரராக களமிறங்கினார். அவர் அதிரடி ஆட்டம் ஆடி வந்தார்.

ராணா - நரைன் ஆட்டம்

ராணா - நரைன் ஆட்டம்

ராகுல் திரிபாதி 13 ரன்களிலும், தினேஷ் கார்த்திக் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின் ராணா - சுனில் நரைன் ஜோடி சேர்ந்து டெல்லி அணியை துவம்சம் செய்தனர். நிதிஷ் ராணா 13 ஃபோர், 1 சிக்ஸ் அடித்து 53 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்தார்.

இமாலய இலக்கு

இமாலய இலக்கு

சுனில் நரைன் 32 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். அவர் 6 ஃபோர், 4 சிக்ஸ் அடித்து இருந்தார். கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது. டெல்லி அணியின் அன்ரிச் நோர்ஜே, ரபாடா, ஸ்டோனிஸ் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தனர்.

தடுமாறிய டெல்லி

தடுமாறிய டெல்லி

அடுத்து சேஸிங் செய்த டெல்லிக்கு முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார் ரஹானே. கடந்த இரண்டு போட்டிகளில் சதம் அடித்த தவான் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரது விக்கெட்களை பாட் கம்மின்ஸ் சாய்த்தார்.

வருண் அசத்தல்

வருண் அசத்தல்

அடுத்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை வருண் சக்கரவர்த்தி கவனித்துக் கொண்டார். ஸ்ரேயாஸ் ஐயர் 47, பண்ட் 27, ஹெட்மயர் 10, ஸ்டோனிஸ் 6, அக்சர் பட்டேல் 9 ரன்களில் அவரது பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

அபார வெற்றி

அபார வெற்றி

டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. 59 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. கம்மின்ஸ் 3, பெர்குசன் 1, வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்கள் வீழ்த்தினர்.

Story first published: Saturday, October 24, 2020, 20:00 [IST]
Other articles published on Oct 24, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+