Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தலைகுனிய வைத்தார்கள்.. கிண்டல் செய்தார்கள்.. மொத்தமாக திருப்பி அடித்த தமிழக வீரர்.. ரெக்கார்டு!

அபுதாபி : 2020 ஐபிஎல் தொடரின் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி.

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அவர் 5 விக்கெட் வீழ்த்தி ஐபிஎல் தொடரில் சாதனை படைத்தார்.

இது வெறும் ஒரு உள்ளூர் வீரரின் சாதனை பந்துவீச்சு மட்டுமல்ல. இதன் பின் கடும் வலி நிறைந்துள்ளது.

திருப்பி அடித்தார்

திருப்பி அடித்தார்

கடந்த சீசனில் அவர் பெரிய தொகைக்கு வாங்கப்பட்டு ஒரே ஒரு போட்டியில் மட்டுமே ஆடி சொதப்பி இருந்தார். அப்போது அவர் மீது கடும் விமர்சனம், கிண்டல் எழுந்தது. அவரை வாங்கிய அணியும் அவரை நீக்கியது. அவை அனைத்திற்கும் சேர்த்து வைத்து திருப்பி அடித்துள்ளார் வருண்.

8.40 கோடி

8.40 கோடி

2019 ஐபிஎல் தொடரில் மிஸ்டரி ஸ்பின்னர் என்றார் அடையாளத்துடன் ஏலத்தில் வருண் சக்கரவர்த்தி பெயர் இடம் பெற்றது. அவரை வாங்க அஸ்வின் கேப்டனாக இருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முயற்சி செய்தது. மற்ற அணிகளும் போட்டி போட அவர் 8.40 கோடிக்கு ஏலம் விடப்பட்டார்.

கிண்டல்

கிண்டல்

அந்த சீசனில் அவர் காயம் காரணமாக பெரும்பாலான போட்டிகளில் பங்கேற்கவில்லை. ஒரு போட்டியில் 3 ஓவர்கள் மட்டுமே வீசி அதிக ரன்கள் கொடுத்து இருந்தார். அப்போது அவரது ஏலத் தொகை அதிகம் என கடுமையாக கிண்டல் செய்யப்பட்டார்.

பஞ்சாப் நீக்கம்

பஞ்சாப் நீக்கம்

கடும் விமர்சனத்தால் தவித்த வருண் சக்கரவர்த்திக்கு அடுத்த அடியை கொடுத்தது பஞ்சாப் அணி. 2020 ஐபிஎல் ஏலத்துக்கு முன் அவரை அணியில் இருந்து நீக்கியது. அவர் மீண்டும் ஏலத்தில் இடம் பெற்றார். இந்த முறையும் அவரை வாங்க போட்டி இருந்தது.

நம்பிய தினேஷ் கார்த்திக்

நம்பிய தினேஷ் கார்த்திக்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் அவரை நம்பி ஏலத்தில் 4 கோடிக்கு கொல்கத்தா அணியை வாங்க வைத்தார். அவர் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் இந்த சீசனில் பந்து வீசி வருகிறார் வருண் சக்கரவர்த்தி.

5 விக்கெட் அள்ளினார்

5 விக்கெட் அள்ளினார்

அதன் உச்சகட்டமாக டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் அள்ளினார் வருண். இந்தப் போட்டியில் டெல்லி அணி 195 ரன்கள் இலக்கை துரத்திய போது, வரிசையாக 5 மிடில் ஆர்டர் வீரர்களை வீழ்த்தினார் வருண்.

டெல்லி தோல்வி

டெல்லி தோல்வி

டெல்லி அணி இந்தப் போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் நரைன் 32 பந்துகளில் 64 ரன்கள் அடித்து இருந்த போதும், 5 விக்கெட் அள்ளிய வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

சாதனை

சாதனை

4 ஓவர்களில் 20 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்கள் வீழ்த்திய வருண், இந்த சீசனின் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். மேலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இரண்டாவது சிறந்த பந்துவீச்சு இதுவாகும். சுனில் நரைன் 19 ரன்களில் 5 விக்கெட்கள் வீழ்த்தியதே அந்த அணியின் சிறந்த பந்துவீச்சாக உள்ளது.

Story first published: Saturday, October 24, 2020, 20:49 [IST]
Other articles published on Oct 24, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+