For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

செம ட்விஸ்ட்.. ஷமியை வைத்து திட்டம் போட்ட பஞ்சாப் கேப்டன்.. மிரள வைத்த மார்கன்.. தரமான செய்கை!

ஷார்ஜா : கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி போட்ட திட்டத்தை அப்போதே தவிடு பொடியாக்கினார் கொல்கத்தா அணி கேப்டன் இயான் மார்கன்.

ஷமியின் அச்சுறுத்தலான பந்துவீச்சை அவரும், ஷுப்மன் கில்லும் சேர்ந்து துவம்சம் செய்தனர்.

ஷமி ஒரே ஓவரில் 2 விக்கெட் எடுத்தாலும் தன் 3வது ஓவரில் அவர் ரன்களை வாரி இறைத்தார்.

பஞ்சாப் - கொல்கத்தா போட்டி

பஞ்சாப் - கொல்கத்தா போட்டி

2020 ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய போட்டி ஷார்ஜாவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.

விக்கெட் சரிவு

விக்கெட் சரிவு

கொல்கத்தா அணி 2வது பந்திலேயே நிதிஷ் ராணா விக்கெட்டை இழந்தது. அடுத்து இரண்டாவது ஓவரில் ஷமி இன்னும் அதிர்ச்சி அளித்தார். ராகுல் திரிபாதி மற்றும் தினேஷ் கார்த்திக் விக்கெட்களை ஒரே ஓவரில் வீழ்த்தினார். 10 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது கொல்கத்தா.

மிரட்டல் பந்துவீச்சு

மிரட்டல் பந்துவீச்சு

ஷமி தொடர்ந்து விக்கெட் வேட்டை ஆடிய நிலையில் அவருக்கு தொடர்ந்து பவர்பிளே முழுவதும் ஓவர் கொடுத்தார் பஞ்சாப் அணி கேப்டன் கேஎல் ராகுல். ஷமி தன் இரண்டாவது ஓவரில் 5 ரன்கள் கொடுத்தார் 2 ஓவரில் 6 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார்.

மீண்டும் ஓவர்

மீண்டும் ஓவர்

ஷமி எப்போதும் அடுத்த இரு ஓவர்களை கடைசி நேரத்தில் தான் வீசுவார். ஆனால், தொடர்ந்து கொல்கத்தா அணியை நிலைகுலைய வைக்க திட்டமிட்ட ராகுல் மூன்றாவதாக அவருக்கு ஓவர் கொடுத்தார். அப்போது கொல்கத்தா அணியின் கேப்டன் மார்கன் களத்தில் இருந்தார்.

தாக்குதல் திட்டம்

தாக்குதல் திட்டம்

மார்கன் ஷமி ஓவரை விளாச திட்டமிட்டார். முதல் மூன்று பந்துகளில் அவர் 2 ஃபோர் அடித்தார். துல்லியமாக பந்து வீசிய போதும் ஷமியை தாக்கினால் தான் பஞ்சாப் அணி 3 விக்கெட் எடுத்து ஆதிக்கம் செலுத்துவதை முறியடிக்க முடியும் என திட்டமிட்டார் மார்கன்.

2 சிக்ஸ்

2 சிக்ஸ்

அந்த திட்டத்தை அதே ஓவரின் கடைசி 2 பந்துகளில் தொடர்ந்தார் ஷுப்மன் கில். அவர் கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு சிக்ஸ் அடித்து மிரள வைத்தார். ஷமியின் 3வது ஓவரில் மட்டும் கொல்கத்தா அணிக்கு 21 ரன்கள் கிடைத்தது.

மீண்டும் விக்கெட் சரிவு

மீண்டும் விக்கெட் சரிவு

மார்கன் 25 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார். கில் அரைசதம் கடந்து அணியை மீட்க போராடினார். கொல்கத்தா அணி ஷமியின் ஓவரை தாக்கினாலும், அதன் பின் பிட்ச்சின் மந்தத் தன்மையால் விக்கெட்களை வரிசையாக இழந்தது.

Story first published: Monday, October 26, 2020, 21:28 [IST]
Other articles published on Oct 26, 2020
English summary
IPL 2020 KKR vs KXIP : Mohammed Shami took 2 wickets in one over
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+