KKR vs KXIP : டாஸ் வென்ற பஞ்சாப்.. முக்கிய வீரர் இல்லை.. கொல்கத்தா அணியிலும் அதே நிலை!
ஷார்ஜா : 2020 ஐபிஎல் தொடரின் 46வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்றது. அந்த அணியில் மயங்க் அகர்வால் இடம் பெறவில்லை.
அதே போல கொல்கத்தா அணியில் அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் இடம் பெறவில்லை. இருவரும் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை.

டாஸ் முடிவு
இந்தப் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் கேஎல் ராகுல் டாஸ் வென்றார். அவர் பந்துவீச்சை தேர்வு செய்ய முக்கிய காரணம் இரண்டாம் பாதியில் பனிப் பொழிவு இருக்கும் என்பது தான். கடந்த சில போட்டிகளில் சேஸிங் செய்த அணிகள் வெற்றி பெற்று வருவதும் முக்கிய காரணம்.

அணி மாற்றம்?
கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இரண்டு அணிகளும் ஒரே மாதிரியாக முந்தைய போட்டியில் ஆடிய அதே அணியுடன் களமிறங்கின. பஞ்சாப் அணியில் மயங்க் அகர்வால், கொல்கத்தா அணியில் ஆண்ட்ரே ரஸ்ஸல் காயம் காரணமாக இந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை.

கடந்த போட்டிகளில் வெற்றி
இரண்டு அணிகளுமே கடந்த போட்டியில் வெற்றி பெற்று இருந்ததால் இந்தப் போட்டியிலும் அதே அணியுடன் களமிறங்கி உள்ளன. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் இரண்டு அணிகளும் பிளே-ஆஃப் வாய்ப்பை இன்னும் அதிகரிக்கலாம்.

தோல்வி அடைந்தால்..
ஒருவேளை இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தால் பஞ்சாப், கொல்கத்தா இரண்டு அணிகளுக்கும் பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பு தொடர்ந்து கிடைக்கும். அடுத்து வரும் போட்டிகளை வென்றாக வேண்டிய அழுத்தம் இருக்கும் என்பதால் இரு அணிகளும் இந்தப் போட்டியில் வெல்லவே முயற்சி செய்யும்.


Click it and Unblock the Notifications