Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதெல்லாம் ஒரு ஸ்கோரா? 100 ரன் கூட தாண்டாத கொல்கத்தா.. டைட் பவுலிங்.. வேட்டையாடிய ஆர்சிபி!

அபுதாபி : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூர் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தவித்தது.

100 ரன் கூட தாண்ட முடியாமல் மோசமாக ஆட்டமிழந்தது கொல்கத்தா அணி.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் அசத்தலாக பந்துவீசி 4 ஓவர்களில் 8 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

கொல்கத்தா பேட்டிங்

கொல்கத்தா பேட்டிங்

2020 ஐபிஎல் தொடரின் 39வது லீக் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் எதிர்பாராத விதமாக தொடர்ந்து ஆட்டமிழந்தனர்.

விக்கெட் சரிவு

விக்கெட் சரிவு

ராகுல் திரிபாதி 1, நிதிஷ் ராணா 0, ஷுப்மன் கில் 1, டாம் பான்டன் 10, தினேஷ் கார்த்திக் 4, பாட் கம்மின்ஸ் 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் இயான் மார்கன் 30 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார்.

கொல்கத்தா ஸ்கோர்

கொல்கத்தா ஸ்கோர்

கடைசி நேரத்தில் குல்தீப் யாதவ் 12, லாக்கி பெர்குசன் 19 ரன்கள் சேர்த்தனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழந்து 84 ரன்கள் மட்டுமே எடுத்தது. இது 20 ஓவர்களும் பேட்டிங் ஆடி ஒரு ஐபிஎல் அணி எடுத்த மிகக் குறைந்த ஸ்கோர் ஆகும்.

பெங்களூர் பந்துவீச்சு

பெங்களூர் பந்துவீச்சு

பெங்களூர் அணியில் முகமது சிராஜ் மிரட்டலாக பந்து வீசினார். அவர் 4 ஓவர்களில் 2 மெய்டன் ஓவர்கள் வீசி, 8 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார். சாஹல் 2, சைனி 1, சுந்தர் 1 விக்கெட் வீழ்த்தினர்.

Story first published: Wednesday, October 21, 2020, 22:36 [IST]
Other articles published on Oct 21, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+