Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதுக்குள்ள 4 விக்கெட்டா.. சிராஜ் வேட்டை.. கொல்கத்தா அதிர்ச்சி.. கோலி செம ஹேப்பி!

அபுதாபி : 2020 ஐபிஎல் தொடரின் 39வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இடையே ஆன போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

பெங்களூர் அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் விக்கெட் வேட்டையாடி கொல்கத்தா அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.

டாஸ் வெற்றி

டாஸ் வெற்றி

2020 ஐபிஎல் தொடரின் 39வது லீக் போட்டி அபுதாபியில் நடைபெற்றது, இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அது அந்த அணி எடுத்த தவறான முடிவாக அமைந்தது. துவக்கத்தில் அந்த அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்தது.

காத்திருந்த அதிர்ச்சி

காத்திருந்த அதிர்ச்சி

இரண்டாவது ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு விக்கெட்களை இழந்து அதிர்ச்சி அளித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. பெங்களூர் அணிக்கு இது கனவு துவக்கமாக அமைந்தது. அத்துடன் நில்லாமல் தொடர்ந்து பெங்களூர் அணி விக்கெட் வேட்டையாடியது.

சிராஜ் விக்கெட் வேட்டை

சிராஜ் விக்கெட் வேட்டை

பெங்களூர் அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் 2வது ஓவரில் 2 விக்கெட் எடுத்தார். அடுத்து 4வது ஓவரிலும் சிராஜ் ஒரு விக்கெட் வீழ்த்தினார். மூன்று விக்கெட் வீழ்த்தி கொல்கத்தா அணியை நிலைகுலைய வைத்தார்.

4 விக்கெட் காலி

4 விக்கெட் காலி

3வது ஓவரில் முகமது சிராஜ் ஒரு விக்கெட் வீழ்த்த கொல்கத்தா அணி மொத்தம் 4 விக்கெட்களை 4 ஓவர்களுக்குள் இழந்து தவித்தது. பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி தொடர்ந்து விக்கெட்கள் சரிந்ததால் மகிழ்ச்சி அடைந்தார்.

கார்த்திக் - மார்கன்

கார்த்திக் - மார்கன்

3.3 ஓவரில் 14 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து கொல்கத்தா அணி தவித்த நிலையில், முன்னாள் கேப்டன் தினேஷ் கார்த்திக், தற்போதைய கேப்டன் இயான் மார்கன் சேர்ந்து அணியை மீட்கும் பொறுப்பை ஏற்றனர். இருவரும் நிதான ஆட்டம் ஆடினர்.

Story first published: Wednesday, October 21, 2020, 20:25 [IST]
Other articles published on Oct 21, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+