Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

13.3 ஓவரில் முடிந்த போட்டி.. ஊதித் தள்ளிய ஆர்சிபி.. வெறும் 84 ரன் எடுத்த கொல்கத்தா பரிதாப தோல்வி!

அபுதாபி : 2020 ஐபிஎல் தொடரில் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி டாஸ் வென்றது.

பேட்டிங் தேர்வு செய்த அந்த அணி மிக மோசமாக ஆடி 84 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெங்களூர் அணி எளிதாக வெற்றி பெற்றது.

டாஸ் முடிவு

டாஸ் முடிவு

இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்றது. அபுதாபியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தாலே எளிதாக வெற்றி பெற்று விடலாம் என தப்புக் கணக்கு போட்டது அந்த அணி. பெங்களூர் அணியின் சிராஜ் அந்த எண்ணத்தை உடைத்தார்.

சிராஜ்

சிராஜ்

சிராஜ் வீசிய 2வது ஓவரில் 2 விக்கெட் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்ந்தது. அப்போது துவங்கிய சரிவு 14 ரன்களுக்கு 4 விக்கெட்கள் என்ற நிலைக்கு சென்றது. அப்போது தினேஷ் கார்த்திக் - இயான் மார்கன் ஜோடி சேர்ந்தனர்.

ஏமாற்றிய தினேஷ்

ஏமாற்றிய தினேஷ்

அனுபவ வீரர்கள் என்பதால் எப்படியும் அணியைக் காப்பாற்றி விடுவார்கள் என நினைத்த ரசிகர்களுக்கு தினேஷ் கார்த்திக் ஏமாற்றம் அளித்தார். அவர் 14 பந்துகளில் 4 ரன்கள் மட்டும் எடுத்து நடையைக் கட்டினார். மார்கன் 30 ரன்கள் எடுத்தார்.

கொல்கத்தா ஸ்கோர்

கொல்கத்தா ஸ்கோர்

மற்ற வீரர்களும் சொற்ப ரன்கள் மட்டுமே எடுக்க கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு 85 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பெங்களூர் சேஸிங்

பெங்களூர் சேஸிங்

எளிதான அந்த இலக்கை நோக்கி ஆடிய பெங்களூர் அணி படிக்கல் 25 ரன்கள் எடுத்த நிலையிலும், ஆரோன் பின்ச் 16 ரன்கள் எடுத்த நிலையிலும் இழந்தது. அடுத்து வந்த குர்கீரத் சிங் மான் 21*, கோலி 18* ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

பெங்களூர் வெற்றி

பெங்களூர் வெற்றி

13.3 ஓவர்களில் பெங்களூர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பந்துவீச்சில் கலக்கிய முகமது சிராஜ் 4 ஓவர்கள் வீசி 8 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். அவர் இரண்டு மெய்டன் ஓவர்கள் வீசியதும் குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, October 21, 2020, 22:53 [IST]
Other articles published on Oct 21, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+