Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படி ஒரு ரெக்கார்டை யாரும் செய்ததில்லை.. வரலாற்று சாதனை செய்த வீரர்.. ஆடிப் போன கொல்கத்தா டீம்!

அபுதாபி : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை தடம் புரட்டிப் போட்டு வரலாற்று சாதனை நிகழ்த்தினார் பெங்களூர் அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ்.

ஆம், ஐபிஎல் வரலாற்றில் எந்த வீரரும் அவர் செய்த சாதனையை கடந்த 12 சீசன்களில் செய்ததில்லை.

கொல்கத்தா அணி இந்தப் போட்டியில் வெறும் 84 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெங்களூர் அணிக்கு 84 ரன்கள் மட்டுமே வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

கொல்கத்தா பேட்டிங்

கொல்கத்தா பேட்டிங்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி பேட்டிங்கில் தடுமாறி மிக மோசமாக வீழ்ச்சி அடைந்தது. கேப்டன் இயான் மார்கன் மட்டுமே அந்த அணியில் 20 ரன்களை கடந்த ஒரே பேட்ஸ்மேன்.

3 விக்கெட்கள்

3 விக்கெட்கள்

முகமது சிராஜ் தான் கொல்கத்தா அணியின் வீழ்ச்சியை தொடங்கி வைத்தார். அவர் வீசிய 2வது ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா விக்கெட்களை வீழ்த்தினார். அதன் பின் நான்காவது ஓவரில் டாம் பான்டன் விக்கெட்டை வீழ்த்தினார்.

இரண்டு மெய்டன்

இரண்டு மெய்டன்

அவர் வீசிய முதல் இரண்டு ஓவர்களையும் விக்கெட் மெய்டனாக அவர் வீசி இருந்தார். 2 ஓவர்களில் ரன்னே கொடுக்காமல் 3 விக்கெட் வீழ்த்தி இருந்தார். கொல்கத்தா அணி அப்போதே பெரும் சரிவை சந்தித்தது. அதில் இருந்து அந்த அணியால் பின் மீளவே முடியவில்லை.

சிறந்த பந்துவீச்சு

சிறந்த பந்துவீச்சு

இன்னிங்க்ஸ் முடிவில் முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசி இருந்தார். 4 ஓவர்களில் 2 மெய்டன் ஓவர்கள் உட்பட, 8 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். இது அவரின் சிறந்த பந்துவீச்சில் ஒன்றாக அமைந்தது.

சாதனை

சாதனை

இதன் மூலம் முகமது சிராஜ் வரலாற்று சாதனை படைத்தார். ஐபிஎல்-இல் இதுவரை எந்த வீரரும் ஒரே போட்டியில் இரண்டு மெய்டன் ஓவர்கள் வீசியதே இல்லை. அந்த சாதனையை படியாத முதல் வீரர் முகமது சிராஜ் தான்.

கொல்கத்தா ரன்கள்

கொல்கத்தா ரன்கள்

கொல்கத்தா அணி இந்தப் போட்டியில் ஆல்-அவுட் ஆவதில் இருந்து தப்பியது. ஆனாலும், 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் மட்டுமே எடுத்தது. 20 ஓவர்கள் முழுவதும் பேட்டிங் செய்து ஒரு அணி எடுத்த குறைந்த ரன்கள் இதுதான்.

Story first published: Wednesday, October 21, 2020, 22:27 [IST]
Other articles published on Oct 21, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+