Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த சம்பவம் ஞாபகம் இருக்கா.. 3 வருட வலி.. அவமானம்.. பழி தீர்த்த கோலி.. தரமான சம்பவம்!

அபுதாபி : 2017ஆம் ஆண்டு.. ஏப்ரல் 23.. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் மறக்க முடியாத நாள்.

ஆம், அன்று தான் அந்த அணி தன் மிக மோசமாக ஸ்கோரை பதிவு செய்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான அந்தப் போட்டியில் 49 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி இருந்தது பெங்களூர் அணி.

அந்த அவமானத்துக்கு பழி தீர்த்து உள்ளார் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி.

குறைந்த ஸ்கோர்

குறைந்த ஸ்கோர்

2017ஆம் ஆண்டு நடந்த அந்தப் போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து 131 ரன்கள் குவித்து இருந்தது. அடுத்து பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 49 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தது. அதுவே ஐபிஎல் தொடரில் ஒரு அணியின் மிகக் குறைந்த ஸ்கோர் ஆகும்.

இரண்டு சீசன்கள்

இரண்டு சீசன்கள்

அதற்கு அடுத்த 2018 மற்றும் 2019 ஐபிஎல் சீசன்களில் பெங்களூர் அணி மிக மோசமாக செயல்பட்டு புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்துக்கு மட்டுமே போட்டி போட்டது. இந்த நிலையில், 2020 ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

கொல்கத்தா போட்டி

கொல்கத்தா போட்டி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான 39வது லீக் போட்டியில் பெங்களூர் அணி டாஸில் தோற்று முதலில் பந்து வீசியது. முகமது சிராஜ் பந்துவீச்சில் ரன்கள் எடுக்க முடியாமல் விக்கெட்களை இழந்து தவித்தது கொல்கத்தா அணி.

84 ரன்கள்

84 ரன்கள்

சிராஜ் 4 ஓவர்களில் 8 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார். கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 84 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணி ரன்னே எடுக்க முடியாமல் தவித்த போதும், விக்கெட்கள் இழந்து தடுமாறிய போதும் பெங்களூர் கேப்டன் கோலி கொண்டாட்டத்தில் இருந்தார்.

பெங்களூர் அபார வெற்றி

பெங்களூர் அபார வெற்றி

85 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்திய பெங்களூர் அணி 13.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி புள்ளிப் பட்டியலில் டெல்லி அணிக்கு அடுத்த இரண்டாவது இடத்தை பிடித்து அசத்தியது.

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

பெங்களூர் அணியின் தோல்விகளால் கடந்த சீசன்களில் துவண்டு போயிருந்த அந்த அணியின் ரசிகர்கள், கொல்கத்தா அணியை பழி தீர்த்து புள்ளிப் பட்டியலில் முன்னேறியதை கொண்டாடி வருகிறார்கள். பெங்களூர் அணி இந்த சீசனில் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கவும் வாய்ப்பு உள்ளது.

Story first published: Thursday, October 22, 2020, 0:22 [IST]
Other articles published on Oct 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+