Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 பேர் டக் அவுட்.. வெறியாட்டம் ஆடிய மார்கன்.. ரஸ்ஸல் அதிரடி.. கொல்கத்தா இமாலய ஸ்கோர்!

துபாய் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார ஆட்டம் ஆடி 191 ரன்கள் குவித்தது.

கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மார்கன் 35 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். ரஸ்ஸல் 11 பந்துகளில் 25 ரன்கள் குவித்து ரன் ரேட்டை எகிற வைத்தார்.

ராஜஸ்தான் அணியின் ஆர்ச்சர், ராகுல் திவேதியா மட்டுமே கட்டுகோப்பாக பந்து வீசினர்.

டாஸ் வெற்றி

டாஸ் வெற்றி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே ஆன போட்டி துபாயில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. இரண்டாம் பாதியில் பனிப்பொழிவு காரணமாக பந்து வீசுவது கடினமாக இருக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்தது ராஜஸ்தான்.

நிதிஷ் ராணா டக் அவுட்

நிதிஷ் ராணா டக் அவுட்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே அதிர்ச்சி அளித்தார் நிதிஷ் ராணா. அவர் ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார். ஷுப்மன் கில் 36, ராகுல் திரிபாதி 39 ரன்கள் குவித்தனர். அடுத்து சுனில் நரைன் டக் அவுட் ஆனார்.

மார்கன் அதிரடி

மார்கன் அதிரடி

தினேஷ் கார்த்திக்கும் டக் அவுட் ஆனார். கேப்டன் இயான் மார்கன் அதிரடி ஆட்டம் ஆடி அணியை மீட்டார். விக்கெட்கள் வீழ்ந்தாலும் ரன் ரேட் 8, 9-ஐ ஒட்டியே இருந்தது. மார்கனுடன், ஆண்ட்ரே ரஸ்ஸல் அதிரடி ஆட்டம் ஆடினார்.

ரஸ்ஸல் ஆட்டம்

ரஸ்ஸல் ஆட்டம்

ஆண்ட்ரே ரஸ்ஸல் 11 பந்துகளில் 25 ரன்கள் குவித்து வெளியேறினார். 1 ஃபோர், 3 சிக்ஸ் அடித்தார். மார்கன் அதிரடி ஆட்டம் ஆடி அரைசதம் கடந்தார். பாட் கம்மின்ஸ் 15 ரன்கள் எடுத்து கடைசி நேரத்தில் அவருக்கு ஒத்துழைப்பு அளித்தார்.

கொல்கத்தா ஸ்கோர்

கொல்கத்தா ஸ்கோர்

மார்கன் 35 பந்துகளில் 68 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது. இது துபாய் மைதானத்தில் பெரிய ஸ்கோர் ஆகும். ராஜஸ்தான் அணியில் அதிரடி பேட்டிங் வரிசை இருந்தாலும் இது சவாலான இலக்காகும்.

வாரி இறைத்த ராஜஸ்தான்

வாரி இறைத்த ராஜஸ்தான்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்ரேயாஸ் கோபால் 3 ஓவர்களில் 44 ரன்கள் கொடுத்தார். ஸ்டோக்ஸ் 3 ஓவர்களில் 40 ரன்களும், வருண் ஆரோன் 2 ஓவர்களில் 22 ரன்களும் வாரி இறைத்தனர். ஆர்ச்சர், திவேதியா கட்டுக்கோப்பாக பந்து வீசினர். திவேதியா 3, கார்த்திக் தியாகி 2, ஸ்ரேயாஸ் கோபால் 1, ஆர்ச்சர் 1 விக்கெட் வீழ்த்தினர்.

Story first published: Sunday, November 1, 2020, 21:53 [IST]
Other articles published on Nov 1, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+