Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கேவை விட மோசமான டீம் இவங்கதான்.. புள்ளிப் பட்டியலில் எட்டாம் இடம் பிடித்த அந்த அணி!

துபாய் : 2020 ஐபிஎல் தொடரில் மோசமான அணியாக பார்க்கப்பட்டு வந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

ஆனால், லீக் சுற்றின் முடிவில் புள்ளிப் பட்டியலில் சிஎஸ்கே அணியை விட மோசமாக செயல்பட்டு எட்டாம் இடம் பிடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.

இது ஒரு வகையில் சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.

சிஎஸ்கே

சிஎஸ்கே

2020 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்த முதல் அணியாகும். ஆனாலும், அந்த அணி அதன் பின் நடந்த தன் கடைசி மூன்று போட்டிகளில் அபார வெற்றி பெற்றுள்ளது. புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகள் பெற்றது சிஎஸ்கே அணி.

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் வெற்றிகள் பெற்று வந்தாலும் இடையே தொடர்ந்து போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. லீக் சுற்றின் முடிவில் அந்த அணி 14 போட்டிகளில் சிஎஸ்கே அணியைப் போலவே 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது.

புள்ளிப் பட்டியல்

புள்ளிப் பட்டியல்

சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகள் தங்களின் லீக் சுற்று முடிவில் 12 புள்ளிகள் பெற்று இருந்தாலும் நெட் ரன் ரேட் அடிப்படையில் சிஎஸ்கே அணி ராஜஸ்தானை விட முன்னே உள்ளது. அதன்படி சிஎஸ்கே அணி புள்ளிப் பட்டியலில் 7ஆம் இடத்துக்கு முன்னேறியது. ராஜஸ்தான் அணி எட்டாம் இடத்தை மட்டுமே பிடித்தது.

பிளே-ஆஃப் குழப்பம்

பிளே-ஆஃப் குழப்பம்

இந்த இரண்டு அணிகள் மட்டுமே பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளன. மும்பை அணி பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்தது. மற்ற ஐந்து அணிகளுக்கும் கடைசி போட்டி நடந்து முடியும் வரை பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பு உறுதியாகாது.

Story first published: Monday, November 2, 2020, 1:00 [IST]
Other articles published on Nov 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+