Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி செய்த அதே தப்பை நான் செய்ய மாட்டேன்.. வார்னர் அதிரடி!

அபுதாபி : 2020 ஐபிஎல் தொடரில் முதன் முறையாக டேவிட் வார்னர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

இந்த சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பதால் பனிப் பொழிவை காரணம் காட்டி அனைத்து கேப்டன்களும் டாஸ் வென்றால் பந்துவீச்சை தேர்வு செய்து வந்தனர்.

ஆனால், அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் அதிரடியாக முடிவை மாற்றி எடுத்துள்ளார்.

எட்டாவது லீக் போட்டி

எட்டாவது லீக் போட்டி

2020 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. எட்டாவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி டாஸ் வென்றது.

டாஸ் முடிவு

டாஸ் முடிவு

டாஸ் வென்ற கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங் தேர்வு செய்தார். இதுவரை பனிப் பொழிவை காரணம் காட்டி பந்துவீச்சை தேர்வு செய்து எதுவும் நடக்கவில்லை. அதனால் தான் பேட்டிங் தேர்வு செய்வதாக அறிவித்து அதிரடி காட்டினார் வார்னர்.

தவறு செய்ய முடியாது

தவறு செய்ய முடியாது

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்து தோல்வி அடைந்து இருந்தார். இந்த நிலையில், மீண்டும் தவறு செய்ய முடியாது என பேட்டிங் தேர்வு செய்தார். அதே சமயம், சிஎஸ்கே கேப்டன் தோனி ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்தார்.

தோனி செய்த தவறு

தோனி செய்த தவறு

சிஎஸ்கே அணி மூன்று போட்டிகளிலும் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதில் முதல் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்ற இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தது. மொத்தம் 7 போட்டிகளில் 6 முறை அணிகள் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து தோல்வி அடைந்தன.

மற்றொரு காரணம்

மற்றொரு காரணம்

ஹைதராபாத் பேட்டிங்கை தேர்வு செய்ய மற்றொரு காரணமும் உள்ளது. அந்த அணி ஹைதராபாத் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்வதையே விரும்பும். அங்கே சேஸிங்கில் எதிரணிகளை கட்டுப்படுத்தி வெல்வதை அந்த அணி வாடிக்கையாக வைத்து இருந்தது.

அணியின் பலம்

அணியின் பலம்

தங்கள் அணியின் பலம் பந்துவீச்சு என்பதை உணர்ந்த டேவிட் வார்னர் இந்த முறை பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இந்தப் போட்டியில் ஹைதராபாத் வெற்றி பெற்றால் மற்ற அணிகளும் பனிப் பொழிவை கணக்கில் கொள்ளாமல் தங்கள் அணியின் பலம், பலவீனத்தை வைத்து டாஸ் முடிவை தேர்வு செய்யக் கூடும்.

Story first published: Saturday, September 26, 2020, 20:17 [IST]
Other articles published on Sep 26, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+