Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜெஃபா.. ஸ்விம்சூட்டில் காதலி.. உருகிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன்.. என்ன அர்த்தம் தெரியுமா?

மும்பை : 2020 ஐபிஎல் தொடர் துவங்க உள்ள நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் கேஎல் ராகுல் தீவிரமாக தயார் ஆகி வருகிறார்.

இதன் இடையே அவரது காதலி ஆதியா ஷெட்டி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படம் ஒன்றை கண்டு உருகி உள்ளார்.

காதல்

காதல்

இந்திய அணி வீரர் கேஎல் ராகுல், பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளான ஆதியாவை காதலிப்பதாக கடந்த ஆண்டு முதல் பேசப்பட்டு வருகிறது. இருவரும் அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும், அதை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தி வந்தனர்.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கேரல் ராகுல் - ஆதியா ஷெட்டி சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அந்த புகைப்படங்களில் சில வைரல் ஆனதும் உண்டு. அதில் ஒரு முறை ராகுல், ஆதியாவின் தந்தை சுனில் ஷெட்டியை கிண்டல் செய்திருந்தார்.

சுனில் ஷெட்டி வசனம்

சுனில் ஷெட்டி வசனம்

சுனில் ஷெட்டி "ஹேரா பேரி" என்ற சூப்பர் ஹிட் நகைச்சுவை படத்தில் பேசிய வசனத்தை கிண்டல் செய்து இருந்தார். அந்தப் படத்தில் சுனில் ஷெட்டி "ஹலோ.. தேவி பிரசாத்?" என்ற வசனத்தை பேசி இருப்பார். அது பிரபலமான நகைச்சுவை வசனம்.

கிண்டல்

கிண்டல்

அதை கிண்டல் செய்து அதே போல முக பாவனையை வைத்துக் கொண்டு இருந்தார் ராகுல். அந்த பதிவு வைரல் ஆனது. அதைத் தொடர்ந்து இருவரும் மாறி, மாறி புகைப்படங்களை பகிர்ந்து வந்தனர். ராகுலின் பிறந்த நாளுக்கு, ஆதியா ஷெட்டி வாழ்த்தி இருந்ததும் வைரல் ஆனது.

என்னுடைய ஆள்

என்னுடைய ஆள்

ஆதியா ஷெட்டி ராகுலை "என்னுடைய ஆள்" என குறிப்பிட்டு இருந்தது ரசிகர்களிடம் லைக்கை அள்ளியது. அதைத் தொடர்ந்து தற்போது ஆதியாஷெட்டி வெளியிட்டுள்ள ஸ்விம்சூட் புகைப்படம் ஒன்றின் கீழ் "ஜெஃபா" என கமென்ட் செய்துள்ளார் ராகுல்.

ஜெஃபா?

ஜெஃபா?

ஜெஃபா என்றால் என்ன என பலரும் குழம்பி இருக்க சில ரசிகர்கள் அதற்கு விளக்கம் அளித்துள்ளனர். ஸ்பானிஷ் மொழியில் ஜெஃபா என்றால் "பாஸ்" என்று அர்த்தமாம். இப்போதே காதலியை பாஸ் என கூப்பிட்டு லைக் வாங்கி இருக்கிறார் ராகுல்.

கேப்டன் ராகுல்

கேப்டன் ராகுல்

கேஎல் ராகுல் கடந்த ஆண்டு வரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வீரராக மட்டுமே இருந்த நிலையில், இந்த ஆண்டு முதல் அவர் அந்த அணியின் கேப்டன் பதவியையும் பெற்றுள்ளார். ஐபிஎல் போட்டிக்கு தயார் ஆகி வருகிறார்.

அடுத்த விக்கெட் கீப்பர்

அடுத்த விக்கெட் கீப்பர்

தோனி ஓய்வு பெற்றுள்ள நிலையில், இந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என கேஎல் ராகுல் பெயரே அதிகம் அடிபடுவதும் குறிப்பிடத்தக்கது. தோனிக்கு மாற்றாக அணியில் இடம் பெறுவது கூடுதல் அழுத்தம் கொடுக்கும் என்றாலும் அதை சமாளிக்கும் திறன் ராகுலிடம் உள்ளதாக முன்னாள் வீரர்கள் பலர் கூறி வருகின்றனர்.

Story first published: Thursday, August 20, 2020, 10:25 [IST]
Other articles published on Aug 20, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+