Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆடும் ஐபிஎல் போட்டிகள் லிஸ்ட்.. தேதி, இடம், நேரம்.. முழு பட்டியல்!

அபுதாபி : 2020 ஐபிஎல் தொடருக்கான முழு போட்டி அட்டவணை வெளியாகி உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நான்காம் நாள் தான் தன் முதல் போட்டியில் ஆட உள்ளது.

Recommended Video

IPL 2020 போட்டிகளுக்கான Schedule வெளியிடப்பட்டுள்ளது

சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் செப்டம்பர் 19 அன்று முதல் போட்டியில் மோத உள்ளன.

செப்டம்பர் 23 அன்று கொல்கத்தா அணி தன் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்க உள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டு முறை ஐபிஎல் கோப்பை வென்ற அணி ஆகும். கடந்த சீசனில் முதல் பாதியில் சிறப்பாக செயல்பட்ட அந்த அணி இரண்டாவது பாதியில் சொதப்பலாக செயல்பட்டது. அணிக்குள் சில பிரச்சனைகளும் ஏற்பட்டன.

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு சில வீரர்கள் அவரது கேப்டன்சிக்கு எதிராக பேசியதாகவும், அதனால் அணிக்குள் கசப்புணர்வு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

ஆண்ட்ரே ரஸ்ஸல்

ஆண்ட்ரே ரஸ்ஸல்

எந்த பிரச்சனைகள் வந்தாலும் தினேஷ் கார்த்திக் தான் கேப்டன் என்பதில் அணி நிர்வாகம் உறுதியாக உள்ளது. அந்த அணியின் மற்றொரு நட்சத்திர வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல். அவரது அதிரடி ஆட்டத்தை நம்பியே அந்த அணி கடந்த சீசனில் செயல்பட்டது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டி அட்டவணை

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டி அட்டவணை

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பங்கேற்க உள்ள 14 ;லீக் சுற்றுப் போட்டிகள், நடக்கும் இடம், நேரம் மற்றும் தேதி ஆகியவற்றை இங்கே காணலாம்.

  • செப்டம்பர் 23, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், அபுதாபி, இரவு 7:30 மணி
  • செப்டம்பர் 26, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், அபுதாபி, இரவு 7:30 மணி
  • செப்டம்பர் 30, ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், துபாய், இரவு 7:30 மணி
  • அக்டோபர் 3, டெல்லி கேபிடல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஷார்ஜா, இரவு 7:30 மணி
  • அக்டோபர் 7, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், அபுதாபி, இரவு 7:30 மணி
  • அக்டோபர் 10, கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், அபுதாபி, இரவு 7:30 மணி
  • அக்டோபர் 12, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஷார்ஜா, இரவு 7:30 மணி
  • அக்டோபர் 16, மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், அபுதாபி, இரவு 7:30 மணி
  • அக்டோபர் 18, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், அபுதாபி, மாலை 3:30 மணி
  • அக்டோபர் 21, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், அபுதாபி, இரவு 7:30 மணி
  • அக்டோபர் 24, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், அபுதாபி, மாலை 3:30 மணி
  • அக்டோபர் 26, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப், ஷார்ஜா, இரவு 7:30 மணி
  • அக்டோபர் 29, சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், துபாய், இரவு 7:30 மணி
  • நவம்பர் 1, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், துபாய், இரவு 7:30 மணி
Story first published: Sunday, September 6, 2020, 19:51 [IST]
Other articles published on Sep 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+