Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எங்களையா கிண்டல் பண்றீங்க? வரிசையாக டாப் 3 அணிகள் காலி.. மிரள வைத்த ஐபிஎல் டீம்!

துபாய் : 2020 ஐபிஎல் தொடரில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று போட்டிகளுக்கு முன்பு வரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பிளே-ஆஃப் செல்ல வாய்ப்பே இல்லை என கூறப்பட்டது.

ஆனால், தற்போது அதை அந்த அணி தலைகீழாக மாற்றி உள்ளது. தொடர்ந்து மூன்று போட்டிகளில் மூன்று டாப் அணிகளை வீழ்த்தி மிரள வைத்துள்ளது.

கடைசி இடத்தில்..

கடைசி இடத்தில்..

7 போட்டிகளில் 1 வெற்றி மட்டுமே பெற்று பஞ்சாப் அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. ஆனால், அடுத்த மூன்று போட்டிகளில் அந்த அணி வென்று தற்போது 10 போட்டிகளில் 4 வெற்றிகள் பெற்று வேகமாக ஐந்தாம் இடத்திற்கு முன்னேறி உள்ளது.

அடுத்தடுத்த வெற்றிகள்

அடுத்தடுத்த வெற்றிகள்

இதில் முக்கியமான விஷயம் அந்த அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் புள்ளிப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் இருக்கும் அணிகளை வீழ்த்தி உள்ளது. பெங்களூர் அணியை வீழ்த்திய பஞ்சாப், அடுத்து மும்பை அணியை சூப்பர் ஓவர் வரை சென்று வீழ்த்தியது.

டெல்லி போட்டியில் வெற்றி

டெல்லி போட்டியில் வெற்றி

அடுத்து புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த டெல்லி அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது. டெல்லி போட்டியில் 165 ரன்களை அந்த அணி சேஸிங் செய்தது. அதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அச்சுறுத்தல்

அச்சுறுத்தல்

டாப் 3 அணிகளை வீழ்த்தியதன் மூலம் பஞ்சாப் அணி மற்ற அணிகளுக்கு தாங்கள் பெரும் அச்சுறுத்தலாக அமைவோம் என்பதை உணர்த்தி உள்ளது. பிளே-ஆஃப் செல்லும் போட்டியில் பஞ்சாப் அணி முந்தத் துவங்கி உள்ளது. ஹைதராபாத், ராஜஸ்தான் போன்ற அணிகளுக்கு பஞ்சாப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

Story first published: Tuesday, October 20, 2020, 23:48 [IST]
Other articles published on Oct 20, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+